கையிருப்பு நெல் அடுத்த வாரம் சந்தைக்கு விநியோகம்…  

நெல் சந்தைப்படுத்தும் சபையில் உள்ள கையிருப்பு நெல் அடுத்த வாரம் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என்று சபையின் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க தெரிவித்துள்ளார்.

சபையின் கையிருப்பில் 50 ஆயிரம் மெற்றிக் தொன் நெல் தற்போது உள்ளது. பெரும் போகத்தின் உற்பத்தி நெல் சந்தைக்கு வரும் வரையில் இந்த கையிருப்பு நுகர்வோரின் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானதாகும்.

சிறிய, நடுத்தர வர்த்தகர்கள் ஒன்றிணைந்து அமைத்துள்ள கூட்டுறவுச் சங்கங்களுக்கு இந்த மொத்த நெல் விநியோகிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். சந்தையில் நிலவும் அரிசியின் தேவையைப் பூர்த்தி செய்வதே இதன் நோக்கமாகும்.

பகிரங்க சந்தையில் நிலவும் விலையிலும் பார்க்க குறைந்த விலையில் கூட்டுறவுச் சங்களுக்கு நெல் விநியோகிக்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

.