இலங்கையில் புதுமையான ஸ்மார்ட்போன் சிந்தனையை நிறுவவுள்ள vivo…  

வைவோ மொபைல் சந்தைக்கு அறிமுகப்படுத்தவுள்ள புதிய ஸ்மார்ட்போன் மாதிரிகள் மூலம், தனது ஈடு இணையற்ற ஸ்மார்ட்போன் தூரநோக்கு சிந்தனையை இலங்கையில் ஸ்தாபிக்கும் பாதையில் உள்ளதுடன், இது இலங்கையில் உள்ள தனது பாவனையாளர்களுக்கு ஆக்கத்திறன் மற்றும் தொழில்நுட்ப ரீதியில் புதுமையான ஸ்மார்ட்போன் அனுபவத்தை உருவாக்கும் அந்த ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மேலும் வெளிப்படுத்துகின்றது.
1995 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட வைவோ சீனாவின், குவாங்டொங் மாகாணத்தின் Dongguanனை தலமையகமாகக் கொண்ட சீன பல்தேசிய ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமாகும்.
நிலையான தொலைபேசிகள் மற்றும் வயர்லெஸ் போன்கள் தயாரிப்பின் மூலம் vivo தொலைத்தொடர்பாடல் மற்றும் நுகர்வோர் இலத்திரனியல் துறைக்குள் நுழைந்தது. அன்று முதல், உலகின்  இந்த வர்த்தகநாமம் ஸ்மார்ட்போன் துறையின் முதற்தர நிறுவனங்களில் ஒன்றாகவுள்ளதுடன், உலகளாவிய ரீதியில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட் போன்கள் வரிசையில் 5 ஆவது இடத்தினை பெற்றுள்ளது.
நாட்டின் இளைஞர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு வடிவமைக்கப்பட்டுள்ள அடுத்த தலைமுறை மொபைல் சாதனங்களின் உற்பத்தி வரிசையுடன் இலங்கையில் 2017 ஆம் ஆண்டு முதல் vivo ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், vivo உள்ளூர் ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்பீட்டளவில் ஒரு புதிய நிறுவனம் என்றாலும், இலங்கை ஸ்மார்ட்போன் பயனர்களின் ஆற்றல் மற்றும் மாறிவரும் சந்தையின் தன்மை ஆகியன தொடர்பில் நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம்.
ஸ்மார்ட்போனில் தமக்கு அவசியான தேவைப்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பில் நன்கு அறிந்து வரும் உள்ளூர் பயனர்கள் மீது கவனத்தை செலுத்த நிறுவனம் தயாராகவுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், vivo மொபைல் எப்போதும் பரிணாமம் அடைந்து வரும் துறையின் கேள்வியை பூர்த்தி செய்யும் பொருட்டு புதுமையான ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தும் செயற்பாட்டை தொடரும்,” என vivoவின், பிரதான நிறைவேற்று அதிகாரி கெவின் ஜியாங் தெரிவித்தார்.
வியாபார நடவடிக்கைகளை தொடங்கியதிலிருந்து vivo, நடுத்தர மற்றும் உயர் தர சந்தைப் பிரிவுகளுக்கான  தொடர்ச்சியான முதற்தர ஸ்மார்ட்போன் மாதிரிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கையில் எங்கள் தயாரிப்பு வரிசைகள் vivo Y series,  vivo V series மற்றும்  vivo s series ஆகியனவாகும். இந்த மொபைல் சாதனங்களை vivo இன் சொந்த அதிநவீன ‘Experience Zone’களில் பாவித்து அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். உள்ளூர் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் விரைவான விற்பனை உதவியை வழங்குவதற்கும் vivo இன் நாடுபூராவுமான சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுடன் இணைந்துள்ளதோடு, தேசிய விநியோகஸ்தராக Abans PLC உடன் இணைந்துள்ளோம்,” என Jiang தெரிவித்தார்.
இலங்கை சந்தையில் அண்மைய தயாரிப்பு ஊக்குவிப்பு நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், Jiang கூறியதாவது,” 2019 ஓகஸ்ட் மாதம், vivo Sri Lanka , vivo S1 ஐ இலங்கை சந்தைக்கு அறிமுகப்படுத்தியது. இது 32MP AI Selfie Camera மற்றும் AI Triple Rear Camera கொண்டது. 2019 மார்ச் மாதம் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட flagship model vivo V15Pro, Triple Rear Camera கொண்டுள்ளதுடன் இதன் திறன் a 48MP (f/2.0) quad pixel sensor (effective 12MP) ஆகும். vivo V15Pro மாதிரியானது Bokeh Mode, Super Night Mode மற்றும் Face Beauty போன்ற பல வகையான செயற்கை நுண்ணறிவினால் வலுவூட்டப்படும் பட மேம்படுத்தல் அம்சங்களைக் கொண்டுள்ளது. vivo தனது millennial பாவனையாளர்களின் கேள்விகளை பூர்த்தி செய்யும் அம்சங்களை உள்ளடக்கியுள்ளமையை இது எடுத்துக்காட்டுகின்றது.
தனித்துவமான படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்பத்துடன், ஒரு வர்த்தக நாமமாக vivo புதுமைகளைத் தொடர்கிறது. 2012 ஆம் ஆண்டில், vivo X1 ஐ உருவாக்கியது, இது Hi-Fi சிப்பை இணைத்த முதல் ஸ்மார்ட்போன், இதன் விளைவாக இணையற்ற ஓடியோ அனுபவம் கிடைத்தது. இந்த தொழில்நுட்பத்தின் முன்னோடியானதிலிருந்து, இது எல்லா vivo ஸ்மார்ட்போன்களிலும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அன்றிலிருந்து, vivo புத்துருவாக்கத்தில் கவனம் செலுத்துகிறது.
vivo 5G, செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களில் தொடர்ந்து முதலீடு செய்கிறது.  vivo Beijing 5G ஆராய்ச்சி நிறுவனத்தை அமைத்துள்ளது. vivo ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையங்களுடனும், தொலைதொடர்புகளில் புதுமைகளை ஏற்படுத்திய மொத்த அனுபவத்துடனும் சேர்ந்து, vivo 5G யுகத்தில் தொழில்நுட்ப புரட்சியின் அடுத்த கட்டத்தில் அதன் பயனர்களுக்கு அனைத்து அம்சங்களிலும் premium தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை வழங்குவதற்கான உறுதியான அடித்தளத்தை அமைத்துள்ளது.
2011 முதல், உலகளவில் 100 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் vivo சான்றிதழ் பெற்றது, சர்வதேசமயமாக்கல் பாதையைத் தேர்ந்தெடுத்து முன்னேறியுள்ளது. vivo உலகளாவிய ரீதியில் 34 சந்தைகளில் தனது பிரசன்னத்தைக் கொண்டுள்ளதுடன், உலகளவில் 1,000 க்கும் மேற்பட்ட நகரங்களில் சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்கப்பெறுகின்றது. ஆசிய பிராந்தியத்தில், இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மியன்மார், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் vivoக்கு பழக்கப்பட்டுள்ளனர்.
வன்பொருள் வடிவம் மற்றும் உற்பத்தி முதல், மென்பொருள் உருவாக்கம் (அண்ட்ரோயிட்டை அடிப்படையாகக் கொண்ட Funtouch OS)  வரை, vivo பூரண மற்றும் நிலைபேறான தொழில்நுட்ப சூழலை கட்டமைத்துள்ளது. தற்போது 20,000 இயக்குனர்கள் vivo வில் பணியாற்றுவதுடன், 3,000 பொறியியலாளர்கள் San Diego, Shenzhen, Nanjing, Beijing, Hangzhou, Taipei  மற்றும் Silicon Valley ஆகிய 7 ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையங்களில் பணியாற்றுகின்றனர். இந்நிறுவனம் Dongguan, Chongqing, Jakarta, New Delhi மற்றும் Bangladesh ஆகிய ஐந்து உற்பத்தி மையங்களைக் கொண்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

.