‘சிக்கலான நேரங்களில் வழிகாட்டுதல் மற்றும் கற்றல்’ பாடசாலை தலைவர்களுக்கான சர்வதேச மாநாட்டை நடாத்தும் TISSL

இலங்கையின் முதற்தர சர்வதேச பாடசாலைகளின் சங்கமான, The International Schools of Sri Lanka (TISSL) தனது வருடாந்த சர்வதேச மாநாட்டை எதிர்வரும் நவம்பர் மாதம் 22 முதல் 24 ஆம் திகதி வரை வெலிகம மெரியட் ஹோட்டலில், ‘சிக்கலான நேரங்களில் வழிகாட்டுதல் மற்றும் கற்றல்’ என்ற தொனிப்பொருளின் கீழ் நடாத்தவுள்ளது.

இந்தச் சங்கமானது 2003 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதுடன். தற்போது நடைமுறையில் உள்ள உள்ளூர் கல்விக் கட்டமைப்பை தரம் உயர்த்தவும், அதனை உலகக் கல்வித் தரத்துக்கு இணையாக மேம்படுத்தும் பொருட்டு முன்னணி சர்வதேச பாடசாலைகளின் தலைவர்களையும் ஒன்றிணைக்கின்றது. இச் சங்கம் தனது உறுப்பினராகவுள்ள பாடசாலைகளிடையே நடைமுறையில் உள்ள புதுமையான கற்பித்தல் மற்றும் கற்றல் முறைகளைப் பரிமாறிக்கொள்வதிலும் கவனம் செலுத்துகிறது.
“TISSL 2019 வருடாந்த மாநாடானது ‘சிக்கலான நேரங்களில் வழிகாட்டுதல் மற்றும் கற்றல்’ என்ற தொனிப்பொருளின் கீழ் இடம்பெறுகின்றது. உள்ளூர் சூழலில் இது மிகவும் பொருத்தமான தொனிப்பொருள் என்றாலும், இம் மாநாடு வெளியக மற்றும் உள்ளக காரணிகளின் விளைவாக ஏற்படக்கூடிய சிக்கல்கள் கவனம் செலுத்தும். தவிர்க்க முடியாத வெளியக காரணிகளான இயற்கை அனர்த்தங்கள், தீவிரவாத செயற்பாடுகள், அல்லது பொதுவான சிக்கலான பூகோள அரசியல் மாற்றங்கள்  அல்லது உள்ளக காரணிகளான நிறுவனத்தின் வியாபார மூலோபாயத்தில் ஏற்படுத்தப்படும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் அல்லது மோசமான செயல்திறன் போன்ற ஏனைய காரணிகள் ஆகியவற்றின் போது எவ்வாறு வழிநடத்துவது, குறிப்பாக தலைவரின் வகிபாகத்தின் முக்கியத்துவம் மற்றும் நெருக்கடி காலங்களில் அது நிலையானதாக இருக்க வேண்டும், இத்தகைய நேரங்களில் ஏனையோரை எவ்வாறு ஊக்குவித்து மற்றும் தைரியமூட்டுவது போன்றவை இந்த மாநாட்டின் போது கவனம் செலுத்தப்படும் விடயங்களாக இருக்கும்,” என TISSL இன் தலைவியும், அலீதியா சர்வதேச பாடசாலையின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான குமாரி ஹப்புகல்ல பெரேரா தெரிவித்தார்.
இவ்வருடத்துக்கான மாநாடு 7 ஆவது வருடாந்த சர்வதேச மாநாடாகும். இந்த வருடாந்த மாநாடு 2003 ஆம் ஆண்டு, உறுப்பினர்களான சர்வதேச பாடசாலைகள், உறுப்பினர் அல்லாத சர்வதேச பாடசாலைகள், அரச பாடசாலைகள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள பாடசாலைகள் ஆகியவற்றின் தலைவர்கள் மற்றும் தீர்மானம் மேற்கொள்வோரின் பங்குபற்றுதலுடன் ஆரம்பிக்கப்பட்டது. இந்த மாநாடுகள் கல்விசார் நிபுணர்கள் கல்வியின் புதிய போக்குகள் தொடர்பில் அறிந்து வைத்திருக்க கற்றல் தளம் / மன்றத்தை வழங்குவதை நோக்காகக் கொண்டது.
கடந்த ஆண்டுகளில் இந்த மாநாடுகள் கல்வி நிர்வாகம் மற்றும் தலமைத்துவம், அதாவது பூகோள குடியுரிமை, சிக்கல்களை தீர்த்தல், பாடசாலை, தலமைத்துவம், மாற்ற முகாமைத்துவம் உள்ளிட்ட பலவற்றுக்கு பொருத்தமானவை தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தன,” என குமாரி ஹப்புகல்ல பெரேரா மேலும் தெரிவித்தார்.
TISSL இன் ஸ்தாபக தலைவர்/ Gateway கல்லூரியின் தலைவருமான Dr. ஹர்ஷ அலஸ் குறிப்பிடுகையில்,” TISSL குழுவின் குறிக்கோள் ஒற்றுமையை வளர்ப்பது, தரமான கல்வியை மேம்படுத்துவது மற்றும் கல்வி அமைச்சுடன் தொடர்புபடுவதுமாகும். இலங்கையில் (தனியார், சர்வதேச மற்றும் அரசு) பாடசாலைகளின் பல வகைகள் உள்ளன. மேலும் சர்வதேச பாடசாலைகள் ‘வேறுபட்டவை’ என பார்க்கப்படுகின்றன. எனினும் அவ்வாறு இல்லையென நிரூபிப்பதே இதன் நோக்கம்.
குழுவில் உள்ள 24 உறுப்பினர் பாடசாலை சங்கிலிகளும் நாடுமுழுவதும் சுமார் 50,000 மாணவர்களின் கல்வித் தேவையை பூர்த்தி செய்கின்றன.இதில் சுமார் 95% இலங்கை நாட்டவர்கள். இலங்கையில் (உள்ளூர் / அரச) சுமார் 10,000 பாடசாலைகள் உள்ளன, ஆனால் சுமார் 70 பாடசாலைகளுக்கு மட்டுமே சேர்க்கைக்கான உண்மையான கேள்வி உள்ளது. இருப்பினும், TISSL பாடசாலைகளில் அனுமதி பெறுவது மிகவும் கடினம். இது மட்டும் நாம் சில விடயங்களைச் சரியாகச் செய்கிறோம் என்பதைக் காட்டுகிறது. ஒன்றாக, தரத்தை மேம்படுத்தி, தரங்களை பராமரிப்பதோடு இலங்கை அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கவும் நாம் விரும்புகிறோம்,”  என்றார்.
TISSL வருடாந்த மாநாடானது தலைவி திருமதி. குமாரி அப்புகல்ல பெரேரா, பொதுச் செயலாளர் திருமதி.மாலிதி ஜயதிஸ்ஸ, பொருளாளர் திரு.ஹர்சன பெரேரா மற்றும் செயலாளர் –  மக்கள் தொடர்புகள் மற்றும் தொடர்பாடல்கள் திருமதி. கிரிஷாந்தி விக்ரம ஆராச்சி மற்றும் TISSL சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களான கலாநிதி. குமாரி கிரேரோ, கலாநிதி.பிராங்க் ஜயசிங்க மற்றும் கலாநிதி.ஹர்ச அலஸ் ஆகியோர் உள்ளிட்ட TISSL மாநாடு ஏற்பாட்டுக்குழு உறுப்பினர்களின் உதவியுடன் ஏற்பாடு செய்யப்படுகின்றது.
உலகத்தரம் வாய்ந்த கல்வியின் உலகளாவிய சிறந்த நடைமுறைகளை இலங்கை வகுப்பறைகளுக்கு கொண்டு வருவதற்கான TISSL இன்  உறுதிப்பாட்டைக் கருத்தில் கொண்டு, இந்த வருடத்தின் மாநாட்டில் 4 முக்கிய சர்வதேச பேச்சாளர்கள் பங்குபற்றுகின்றனர்.

‘Dr. Phil Kirkman – Principal Lecturer and Head of Education Partnerships for the School of Education at Anglia Ruskin University (ARU), இவரை Cambridge Assessment International Examinations together மற்றும் Cambridge University Press அழைத்து வருகின்றனர். Oxford University Press பேச்சாளர்  Kostadinos Lekanides – author of Extended Essay and contributing author for TOK Kosta is currently an Assistant Head Teacher,Head of IB Programmes and TOK Coordinator at Jumeirah English Speaking School in Dubai. Pearson Edexcel பேச்சாளர் Ujjwal Singh, Vice President – New Product & Solutions, Global Market, Pearson. British Council பேச்சாளர் Natalia Cohen, Coxless Crew Team Member, Inspirational Speaker and Mindset ஆகியோர் சிறப்புப் பேச்சாளர்களாக கலந்து கொள்கின்றனர்.

இந்த நிகழ்வின் தங்க அனுசரணையாளர்கள் Cambridge Assessment International Examinations, Cambridge University Press, Oxford University Press  மற்றும் Pearson Edexcel. இவர்கள் ஒவ்வொரும் தொனிப்பொருளின் அடிப்படையில் மாநாட்டில் உரையாற்ற ஒரு சர்வதேச பேச்சாளரை அழைத்து வருகின்றனர். இதற்கு மேலதிகமாக, British Council வெள்ளி அனுசரணையாளராக இணைந்துள்ளதுடன், இந்நிகழ்வுக்கு பேச்சாளர் ஒருவரை வழங்குகின்றது. ஏனைய வெள்ளி அனுசரணையாளர்கள்; Business Management School, Horizon Campus, Jeya Book Center, Nations Trust Bank, Prime Business Solutions, Star Publishing, Softlogic Life Insurance PLC, South Asian Technologies மற்றும் University of Monash. வெண்கல அனுசரணையாளர்களாக Create Labs – Singapore மற்றும் St Aidan’s Anglican Girls’ School – Australia கைகோர்த்துள்ளனர்.
இலங்கையில் கல்விப் போக்கை மாற்றிய அர்ப்பணிப்புள்ள கல்வியாளர்களை அடையாளப்படுத்தும் நோக்குடன் முதன்முறையாக TISSL இன் வாழ்நாள் சாதனை விருதினை  வழங்கும்,  குமாரி ஹப்புகல்ல பெரேராவின் யோசனையை, TISSL இன் நிர்வாகக் குழு அமுல்படுத்த தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில்,”ஒரு நாட்டை அடுத்த நிலை முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் கொண்டு செல்வதற்கான ஒரே வழி இளைஞர்களுக்கு கல்வி கற்பிப்பதும், நுண்ணறிவுகளை வழங்குவதன் மூலம் பாதையை அறிவூட்டுவதும் ஆகும்.  சமுதாயத்தைப் பயிற்றுவிக்கும் பொறுப்பு வழிகாட்டியாக செயல்படும் அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களால் மேற்கொள்ளப்படுகிறது. இலங்கையில் உள்ள பாடசாலைகளின் மேம்பாட்டிற்காக தங்கள் வாழ்க்கையை தங்கள் முன்னோடி மனப்பான்மையுடன் அர்ப்பணித்த, புதுமை மற்றும் தன்னலமற்ற அர்ப்பணிப்புடன் கல்வியில் சிறந்து விளங்கியவர்களை கௌரவிக்கும் நோக்கில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது,” என்றார்.
இந்த நிகழ்வில் அனைத்து பாடசாலைத் தலைவர்கள், பிரிவுத் தலைவர்களிலிருந்து உயர்மட்டத்தில் உள்ளோர் மற்றும் பிற கல்வி பங்காளர்கள் கலந்துகொள்ள முடியும். இந்த நிகழ்வில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் TISSL உடன் [email protected] என்ற மின்னஞ்சல் ஊடாக தொடர்புகொள்ள முடியும்.

Leave A Reply

Your email address will not be published.

.