GSP+ ஊடாக நிலைபேறான அபிவிருத்தியை ஊக்குவிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்…

இலங்கைக்கு GSP+ சலுகைகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பான தீர்மானத்தை ஐரோப்பிய ஒன்றியம் கடந்த 2017 மே மாதம் மேற்கொண்டிருந்தது. இதனூடாக, 28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய சந்தைகளுக்கு 6000 உள்நாட்டு உற்பதிகளை ஐரோப்பிய ஒன்றிய கட்டணத்தின் 66% பெறுமதியில் ஏற்றுமதி செய்யக்கூடிய வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகையை இலங்கை பெற்றுக் கொண்டதனூடாக, பிராந்தியத்தின் அண்மைய நாடான பாகிஸ்தான் மற்றும் ஆபிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவைச் சேர்ந்த நாடுகளுடன் போட்டியிடக்கூடிய சூழல் கிடைத்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரகாரம்,  GSP+ சலுகை வழங்கப்பட்டதனூடாக, இலங்கையிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி 20 சதவீதத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மீன் உற்பத்திகளின் ஏற்றுமதி தடை தளர்த்தப்பட்டமை மற்றும்  GSP+ வரிச்சலுகை மீள வழங்கப்பட்டிருந்தமையை தொடர்ந்து ஆடைகள் உற்பத்தி, மீன் ஏற்றுமதிகள் போன்றன முதல் ஆண்டில் இரட்டிப்பாக அதிகரித்திருந்தது. இதற்கு மேலாக, தேயிலை, டயர்கள், இரத்தினக்கற்கள், மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் பாதணிகள் போன்ற துறைகளிலும் வளர்ச்சி பதிவாகியிருந்தது.
புளுPூ வரிச்சலுகையில் இலங்கை உள்வாங்கப்பட்டிருந்ததை தொடர்ந்து, நாட்டின் ஆடைத் தொழிற்துறை, பெருமளவு அனுகூலத்தை பெற்றுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கான நாட்டின் 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஏற்றுமதியில் 60 சதவீதத்தை இந்தத் துறை கொண்டுள்ளது.
GSP+ வரிச்சலுகையிலிருந்து அனுகூலம் பெறுவதற்கு, மனித உரிமைகள், ஊழியர், ஆட்சி மற்றும் சூழல் போன்ற பிரிவுகளில் சர்வதேச தீர்மானங்கள் சிலவற்றுக்கு கட்டுப்பட்டு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. இந்த தீர்மானங்களில், பெண்களுக்கு எதிரான சகல விதமான ஒடுக்குதல்களையும் நீக்கும் தீர்மானம், ஒன்றிணைவதற்கான சுதந்திரம் மற்றும் ஏற்பாடு செய்வதற்கான உரிமையை பாதுகாப்பது தொடர்பான தீர்மானம், சிறுவர் உரிமை தொடர்பான தீர்மானம், காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு தீர்மானம் மற்றும் உயிரியல் பரம்பல் தொடர்பான தீர்மானம் போன்றன இவற்றில் அடங்கியுள்ளன.
இவை அனைத்தும் பன்முகப்படுத்தப்பட்ட ஏற்றுமதியினூடாக இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்குவதுடன், புதிய முதலீடுகளை கவருவதாகவும், இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையிலான வியாபார உறவுகளை கட்டியெழுப்புவதாகவும் அமைந்துள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தின்  GSP+ வரிச்சலுகையினூடாக, இலங்கைக்கு உயர் தரம் வாய்ந்த நிலைபேறான தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், சேதன மற்றும் சூழலுக்கு நட்பான உற்பத்தி முறை போன்றவற்றை பின்பற்றவும் முடிந்துள்ளது.
மேலும் நியாயமான வர்த்தக ( (Fair Trade) ) செயன்முறைகளை பின்பற்றவும் ஏதுவாக அமைந்துள்ளது. இவ்வாறான பெறுமதி சேர்க்கப்பட்ட நடவடிக்கைகளினூடாக, புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதுடன், துறைகளும் நிறுவப்பட்டுள்ளன.
GSP+ வரிச் சலுகையினூடாக இலங்கையின் கிராமியமட்டத்தில் பணியாற்றுவோருக்கும் அனுகூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு உதவக்கூடிய புதிய ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும் நாட்டின் விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகளைச் சேர்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் போன்றன முன்னெடுக்கப்படுகின்றன.
சம்பந்தப்பட்ட தீர்மானங்களை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கு மேலாக,  GSP+ வரிச் சலுகையினூடாக இலங்கைக்கு சர்வதேச முதலீட்டாளர்களை கவர முடிந்துள்ளதுடன், நேரடி வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக் கொள்ளவும் முடிந்துள்ளது.
GSP+ வரிச்சலுகையுடன் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் தொடர்பில் மீளாய்வு நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது. இந்த நடவடிக்கையை இலங்கை அரசாங்கம், சிவில் சமூகம் மற்றும் வியாபார சமூகம் மற்றும் இதர உள்நாட்டு பங்காளர்கள் ஆகியவற்றுடன் ஈடுபாட்டை பேணுவதனூடாக முன்னெடுக்கின்றது.

Leave A Reply

Your email address will not be published.

.