நாளைய கொழும்பிற்குள் முன்னேறிச் செல்லும் ‘Marina Square’

‘மரினா ஸ்குயார்’ (Marina Square) செயல் திட்டத்தின் பிரதான ஒப்பந்தக்காரராக சைனா ஹார்பர் என்ஜினியரிங் கம்பனி (CHEC) தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இச் செயல் திட்டத்தின் அற்புதமான கட்டமைப்பு நிர்மாணப் பணிகள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  CHEC நிறுவனமானது 1998ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் அபிவிருத்தியில் சிறப்பான முறையில் தன்னை ஈடுபடுத்தி வருவதுடன், தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, வெளிச்சுற்று அதிவேக நெடுஞ்சாலை, ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள சர்வதேச விமான நிலையம், கொழும்பு தெற்கு கொள்கலன் முனையம், துறைமுக நகரம், சங்கரி-லா, ஹெவ்லொக் சிற்றி போன்ற மிகப் பெரிய நிர்மாணச் செயல் திட்டங்களையும் அதேபோன்று மேலும் பல பாரிய உட்கட்டமைப்பு செயல் திட்டங்களையும் இந்நிறுவனம் செய்து முடித்திருக்கின்றது


‘மரினா ஸ்குயார்’ குடியிருப்பு தொகுதி கடலுக்கு முன்பக்கமாக அமைந்துள்ளமையால், கடல், நகரம் மற்றும் மலைகளின் அற்புதமானதும் திகைப்பூட்டுவதுமான காட்சிக் கோணங்களை அங்குள்ள அநேகமான குடிமனைகளில் இருந்து கண்டுகளிக்கக் கூடிய வசதி காணப்படுகின்றது. துறைமுக நகர செயல் திட்டத்துடன் சேர்ந்து பரிணாம வளர்ச்சி காணும் கொழும்பின் எதிர்காலத்தை காண்பதற்கு இந்த கொழும்பு மேல்நிலை மரினா ஸ்குயார் ( Marina Square Uptown Colombo) கட்டிடத் தொகுதி மிகச் சிறந்த அமைவிடம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. துறைமுக நகரம் கைக்கு எட்டிய தூரத்தில் காணப்படுகின்ற அதேவேளை, உள்-நகர மேற்புற அதிவேக நெடுஞ்சாலை ஒரு கிலோமீற்றர் தூரத்திலேயே இருக்கின்றமையால் ‘மரினா ஸ்குயார்’ உண்மையிலேயே நாளைய கொழும்பின் இதயம் போன்ற கேந்திர பகுதியில் அமைந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

.