புதிய ஜனாதிபதியும் நாட்டின் எதிர்காலமும்

இலங்கையின் 7ஆவது ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த காலத்தில் அதாவது மஹிந்த ராஜபக்ஷ வின் அரசாங்கத்தில் பல முக்கிய பங்களிப்பினை வழங்கியதன் மூலம் பெரும்பாலான மக்களின் செல்வாக்கினை தன்னகத்தே கொண்டு ஒரு சிறந்த தலைவராகத் திகழ்ந்து வந்தார்.

இவர் இதற்கு முன்னர் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடவில்லை என்றாலும் பல உயர் பதவியில் அரச நிருவாகத்தில் கடமையாற்றி வந்திருந்தார். இவரின் கடந்த கால வெற்றி நோக்கிய திட்டத்தின் காரணமாக மக்கள் இவரை ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக நிற்க பல அழுத்தங்களைப் பிரயோகித்திருந்தனர். அதுமாத்திரமல்லாது அவர் ஒரு பூரண இலங்கைப் பிரஜையா? இல்லையா? போன்ற பல எதிர் வாதங்கள் இருந்தன.

இவ்வாறு அவர் முன்னால் காணப்பட்ட எல்லா சவால்களையும் தவிடு பொடியாக்கி பிரம்மாண்ட ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டினார். தரான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே இலங்கை நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டு புதிய சரித்திரத்தைப் படைத்துள்ளார். இதை நாம் நுணுக்கமாக அவதானிப்போமாயின் அவரது தனி மனித ஒழுக்கமும், நாட்டுப்பற்றும், அடைய வேண்டிய இலக்கினை திறம்பட அடைந்து மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கினைப் பெற்றதன்வாயிலாக மக்களின் இதயங்களில் தனி ஒரு இடத்தைப் பிடித்த தலைவராக வரமுடிந்துள்ளது.

தற்போது புதிய ஜனாதிபதி, புதிய பாராளுமன்றம், புதிய அரசாங்கம் மற்றும் புதிய கொள்கைகள் என்ற புதிய பாதையை நோக்கி இலங்கை நகர ஆரம்பித்துள்ளது. ஜனாதிபதியாக கோதாபயா ராஜபக்ஷ பதவிக்கு வந்து முதலில் பிறப்பித்த கட்டளையானது “அரச அலுவலகங்களில் அரசியல் தலைவர்களின் படங்கள் காட்சிப்படுத்தக் கூடாது. அரச இலட்சணை மட்டும் காட்சிப்படுத்தல் வேண்டும்” என்பதே ஆகும். முதல் பந்திலேயே சிக்ஸர் அடிப்பது போல தனது முதல் கட்டளையினை பிரப்பித்து அரசாங்கத்திற்கு ஏற்படக்கூடிய 100 மில்லியன் ரூபாய் செலவினைத் தவிர்த்ததன் வாயிலாக எல்லோர் மனதிலும் ஒரு நல்ல இடத்தைப் பிடித்து ஒரு நல்ல தலைவனுக்குரிய குணாதிசயத்தை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் தனது ஜனாதிபதி செயலக உத்தியோகத்தர்களை 2500 இலிருந்து 500ஆக குறைக்க உத்தரவிட்டுள்ளார். இச்செயற்பாடு மக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. அத்துடன் எந்த ஒரு தேவையற்ற காரணத்திற்காகவும் சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கையை குழப்பும் வண்ணம் பாதைகளை மூடுதல், போக்குவரத்தின் திசையைத் திருப்புதல் போன்றவற்றை அறவே தடைசெய்துள்ளார். மேலும் பல நடைமுறையில் உள்ள சிக்கலான ஒன்றுக்கு மேற்பட்ட வரிமுறைகளை மாற்றி அமைப்பதற்கும், வரி வீதத்தினைக் குறைப்பதற்கும் நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றார். இது நாட்டு மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பதாக அமையும்.

மேலே நாம் அவதானித்த முதற்கட்ட நடவடிக்கையின் வாயிலாக புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி எமக்கு என்ன கூற வருகின்றார் என்பதை பின்வருவனவற்றின் வாயிலாக நாம் பார்ப்போம்.

நாட்டின் பொருளாதாரத்தை மீள கட்டியெளுப்புதல்

தற்போது இலங்கை அரசாங்கம் பாரிய கடன் சுமையை தாங்கியவண்ணம் இருக்கின்றது. அத்துடன் பொருளாதார மந்த நிலையால் எதிர்ப்பார்த்த பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியாதுள்ளது. இதனை முதன்மையாகக் கருதி ஜனாதிபதி நாட்டின் தேவையற்ற செலவினங்களைக் குறைப்பதற்கு எதுவித தயக்கமுமின்றி முடிவுகளை எடுக்க தொடங்கியுள்ளார். இது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகவே காணப்படுகின்றது. ஏனென்றால் “அரசன் எவ்வழியோ குடிமகனும் அவ்வழியே” என்ற பொன்மொழிக்கிணங்க ஜனாதிபதி ஒரு முன்னுதாரணமாக திகழ்கின்றார்.

ஸ்திரமான பொருளாதாரக் கொள்கை

கடந்த காலத்தை நாம் உன்னிப்பாக கவனிப்போமாயின் பாரிய ஒரு குறைபாடாக காணப்பட்ட விடயம் ஸ்திரமற்ற பொருளாதாரக் கொள்கை என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. உள்நாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமன்றி வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இந்த ஸ்திரமற்ற தன்மையை அந்தந்த அரசிற்கு தெரிவித்தவண்ணமே இருந்தார்கள். இருப்பினும் இதனை கையாளுவதில் பல நடைமுறைச் சிக்கல்களின் வாயிலாக தோல்வியையே கண்டனர். ஆனால் எமது புதிய ஜனாதிபதி மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் இலங்கை நாட்டின் பொருளாதாரக் கொள்கையினைத் திட்டமிட்டு அதனை நோக்கியே அவரது அரசாங்கம் பயணிக்க கட்டளைகளை பிறப்பிகின்றார். இதை மிகவும் ஒரு அனுகூலமான செயற்பாடாக இலங்கை மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கருதுகின்றார்கள்.

மக்களின் நன்மதிப்பைப் பெற்ற ஒரு தலைவன்
கடந்த பல வருடங்களாக இலங்கைப் பங்குச்சந்தைக் கொடுக்கல் வாங்கல்கள் மிகவும் மந்தகதியில் செயற்பட்டுவந்தது. புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்ட முதலாவது நாளிலேயே பங்குச்சந்தை நடவடிக்கையானது புது உத்வேகத்தை அடைந்துள்ளது. இந்த மாற்றமானது ஒரு தலைவனிடத்தே மக்கள் மிகுந்த நம்பிக்கையை வைத்தால் மாத்திரமே ஏற்படுத்த முடியும். இதனை புதிதாக பதவியேற்ற ஜனாதிபதி கோதாபயா ராஜபக்ஷ நிரூபித்துள்ளார். இது குறூய மற்றும் நீண்ட கால நன்மைகளை நட்டிற்கு ஏற்படுத்தும்.

ஒழுக்கம் நிறைந்த இலங்கையின் பயணம்
ஜனாதிபதி கோத்தபாய  ராஜபக்ஷ போதைப் பொருட்கள் பாவனை மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை முடக்கும் பணிகளை முப்படைகளிடம் ஒப்படைத்துள்ளார். இதன்வாயிலாக எம் வருங்கால சந்ததியினரை ஒரு நல்ல குடிமகனாக உருவாக்க முயற்சி செய்கின்றமையை காணக்கூடியதாக இருக்கின்றது. “வருமுன் காப்போம்” என்ற நல்வாக்கியத்திற்கு இணங்க ஆரம்பத்திலேயே இளைய சமுதாயத்தினரை நல்வழியில் வழிநடாத்தி நல்ல ஒரு குடிமகனாக உருவாக்குவதன் வாயிலாக வீட்டுக்கும் நாட்டுக்கும் ஏன் முழு உலகத்திற்குமே ஒரு சொத்தாக ஒவ்வொரு இலங்கைப் பிரஜையையும் உருவாக்க உத்தேசித்துள்ளார். இது மிகவும் ஒரு முக்கிய நிகழ்ச்சித் திட்டமாகும். நல்ல பிரஜையாக எமது வருங்கால சந்ததியினரை உருவாக்குவதன் மூலம் அவர்களின் கல்வியையும், அறிவையும் திறம்பட வழங்குவதன் வாயிலாக எமது நாட்டை நிச்சயமாக பொருளாதாரம் ரீத்தியாக உயர்வடைந்த ஒரு நாடாக மாற்றியமைக்கக் கூடிய பாரிய கொள்கையாகவே அமைந்துவிடும். அதுமாத்திரமன்றி ஒவ்வொரு மக்களினதும் தொழில் புரியும் அறிவு (Skill) உச்ச நிலையை அடையும்வண்ணம் செய்வதன் வாயிலாக எமது முழு நாடுமே நல்ல தொரு நிலையை நோக்கி செல்வதாக அமைந்துவிடும்.

அந்நிய முதலீடுகள்
புதிய ஜனாதிபதி கோதாபயா ராஜபக்ஷ பல கவர்ச்சியான கொள்கைகளை உடனடியாகவும் மற்றும் தகுந்தாற்போன்று வருங்காலத்திலும் அறிமுகப்படுத்த உத்தேசித்ததன் வாயிலாக வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும்வண்ணம் செயற்படத் தொடங்கியுள்ளார். உதாரணமாக – அவரின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கிணங்க பல வரிசலுகைகளை வழங்குவதாக கூறியிருந்தார். இதனால் பல வெளிநாட்டு பாரிய முதலீடுகள் இலங்கையை நோக்கி வர ஆரம்பித்துள்ளன. அத்துடன் அந்நிய நாணய உட்பாய்ச்சல், புதிய தொழில் வாய்ப்பு, புதிய தொழிநுட்ப அறிமுகம், தலவருமானம் அதிகரிப்பு போன்றன அவற்றில் சிலவாகும். அதுமாத்திரமன்றி புதிய உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பதுடன் நாட்டின் இறக்குமதியும் குறையைக்கூடிய சாத்தியம் இருக்கின்றது. எனவே பாரிய அந்நிய செலாவணி வெளிப்பாய்ச்சலை தவிர்க்கக்கூடியதாக இருக்கும்.

பாதுகாப்புக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியத்துவம்.
மேற்கூறிய செயற்திட்டத்தின் வாயிலாக இலங்கையின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளார்ச்சிக்கு அதிமுக்கியத்துவம் வழங்கப்படவுள்ளது. இதன் வாயிலாக உள்நாட்டு மக்கள் மற்றும் தொழில் புரிவோர் மட்டுமன்றி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பாரிய நன்மை அடைவர். ஏற்கனவே ஏப்ரல் மாதம் நடைபெற்ற “உயிர்த்த ஞாயிறு” தொடர்க்குண்டுத் தாக்குதல்கலினால் மிகவும் பாரதூரமாக நலிவடைந்து காணப்படும் சுற்றுலாத்துறையும், அதனுடன் தொடர்புப்பட்ட ஏனைய துறைகளும் நிச்சயமாகவளர்ச்சிப் பாதையை நோக்கி செல்லக்கூடிய சிறந்த ஒரு சந்தர்ப்பமாக இது அமையும். இலங்கை ஒரு சிறிய அழகிய நாடாக இருப்பதனால் இதனை “Wonder of Asia” என்று அழைப்பார்கள். இயற்கையாகவே சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் தன்மையை உள்ளடக்கியதாக இலங்கை இருப்பதனால் சுற்றுலாத்துறை இலங்கையின் மொத்தத் தேசிய வருமானத்திற்கு பாரிய அந்நிய செலாவணியை ஈட்டிக்கொடுக்கும் ஒரு மார்க்கமாக வருங்காலத்தில் செயற்படக்கூடியதாக இருக்கும். என்பதுடன் இலங்கை திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சியை அடைய நன்மை பயக்கும் வகையில் அமையும்.

E-Commerce – இலத்திரனியல் வர்த்தக நடவடிக்கைகள்
புதிய அரசாங்கமானது Information Technology & AI (Artificial Intelligent) முறைமையினை எல்லா பொருளாதாரத் துறையிலும் ஈடுத்த உத்தேசித்துள்ளது. இதற்கு முன்னுதாரணமாக பல சலுகைகள் வழங்குவதன் வாயிலாக (உதாரணமாக – இலகுகடன், வரிச்சலுகை போன்றன) சரிந்துள்ள பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆகவே இவ் IT துறையில் ஈடுபடுவர்கள் பல நன்மைகளை இனிவரும் காலங்களில் அடையக்கூடியதாக இருக்கும்.

மேற்கூறிய காரணிகளை உற்றுநோக்குமிடத்து நாம் பல அனுகூலங்களை இனிவரும் காலங்களில் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். எனவே இலங்கையிலுள்ள நாம் ஒவ்வொருவரும் பின்வரும் செயற்திட்டங்களையும் வழிமுறைகளையும் சரியாக பின்பற்றுவோமாயின் எமது சுதந்திரமான வாழ்க்கையினையும் மற்றும் வாழ்க்கைத்தரத்தினையும் நிச்சயமாக உயர்திக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

அவையாவன,

• சட்டதிட்டங்களை முறையாக அறிந்திருந்து அதனை தகுந்தாற்போன்று செவ்வனே கடைப்பிடித்தல் வேண்டும். (Ignorance of Law is No Excuse).சட்டதிட்டங்களை கடைபிடிக்காவிடின்தண்டம் (Penalty) மற்றம் சிறைவாசம் (Imprisonment) போன்ற தண்டனைகளுக்கு ஆளாக வேண்டி ஏற்படும்.

• தொழில் செய்வோராயின் முறையாக உரிய இடத்தில் பதிவு செய்து அத்துறை சார்ந்த விதிமுறைகளை (Rules & Regulations) முறையாக பின்பற்றுவது மாத்திரமன்றி ஒழுங்கு முறைப்படி தேவையான படிவங்களை ஆவணப்படுத்தி வைத்திருத்தல் வேண்டும்.

• அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை உரிய காலத்திற்குள் செலுத்தி பற்றுச்சீட்டினை முறையாகப் பெற்று வைத்திருத்தல் வேண்டும்.

• இலஞ்சம் மற்றும் சட்டத்திற்கு முறையற்ற விதத்தில் கொடுக்கல் வாங்கல்களை நிச்சயமாக தவிர்த்துக்கொள்ளல் வேண்டும்.

• கணக்கில் காட்டாத அசையும், அசையாச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் போன்றனவற்றை முறையாக கணக்கில் வெளிப்படுத்தித் தம்மை ஒரு சிறந்த பிரஜையாக நிலைநாட்டல் வேண்டும்.

• போதைவஸ்து நடவடிக்கைகள் மற்றும் கறுப்புப்பணம் போன்ற சட்டத்திற்கு முரண்பாடான செயற்பாடுகளை அறவே தவிர்த்தல் வேண்டும்.

• காலத்திற்குக் காலம் அறிமுகமாகும் சட்டதிட்டங்களைப் பின்பற்ற வேண்டும்.

மேற்கூறிய முறைகளை நாம் சரியாக பின்பற்றுவோமாயின் இலங்கை நாட்டு மக்களாகிய நாம் எவ்வித பயமும் அச்சமுமின்றி இனிவரும் காலங்களில் மகிழ்ச்சியுடனும் முழு சுதந்திரத்துடனும் வாழக்கூடியதாக இருக்கும்.

Leave A Reply

Your email address will not be published.

.