இலங்கையில் KIAவின் புதுவரவு… 

வாகனம் ஓட்டுதலின் வீர உணர்வு கொண்ட குறைந்த எரிபொருள் பாவனைக்கான உலக கின்னஸ் சாதனையைப் படைத்த மேலும் சூழலுக்கு நேசமான தன்மை கொண்ட அனைத்தும் புதிய 2020 Kia Niro வாகனம் இன்று முயை Kia Motors (லங்கா) லிமிடெட் நிறுவனத்தால் ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

141 குதிரை வலு கொண்ட, 8.6 செக்கன்களில் மணிக்கு 0 கிலோமீற்றரிலிருந்து 96 கிலோமீற்றர் வேகத்தை பெறக்கூடிய உலக கின்னஸ் சாதனையாக உறுதிப்படுத்தப்பட்ட 95 ஒக்டேன் பெற்றோலில் ஒரு லீற்றருக்கு 32.5 கிலோமீற்றர் பயணிக்கின்ற, கிலோமீற்றருக்கு 88 கிராம் காபனீரொட்சைட் (CO2) மட்டுமே வெளியேற்றும் மத்திய அளவிலான நகர்வல SUV வாகனம் KIA நிறுவனத்திடமிருந்து முற்றுமுழுதாக அர்ப்பணிக்கப்பட்ட ஹைபிரிட் (Hybrid) வாகனமாக 2020 Kia Niro இலங்கைக்கு வந்துள்ளது.

கிறீன் கார் சஞ்சிகையில் (Green Car Journal) 2018ஆம் ஆண்டுக்கான பசுமையான SUV எனப் பெயரிடப்பட்ட Kia Niro மிகச்சிறந்த எரிபொருள் பயன்பாட்டையும் இட வசதியையும் கொண்ட SUV வாகனமாகும், மேலும் மேம்படுத்தப்பட்ட ஹைபிரிட் (Hybrid) சக்தித் திறனை வழங்கும் வகையிலும், பாவனையின் போது இலகுவாக கையாளக்கூடியதுமாக, கவர்ச்சிகரமான தோற்றத்திலும் அமைந்துள்ளது.

ஆரம்பத்திலிருந்தே தூய ஹைபிரிட் (Pure Hybrid) வாகனமாக வடிவமைக்கப்பட்ட இதனது கவர்ச்சியும் நவீனமான வடிவமைப்பும், பழைமையான வடிவமைப்பைக் கொண்ட தற்போது சந்தையில் போட்டியாக உள்ள ஹைபிரிட் (Hybrid) வாகனங்களோடு ஒப்பிடும் போது இதனை தனித்து நிற்கச் செய்கிறது.

சந்தையில் காணப்படும் Mild Hybrid வாகனங்களோடு ஒப்பிடும் போது, Kia Niro வாகனமானது தூய ஹைபிரிட் ஆக (Pure Hybrid) காணப்படுகிறது. அதனது லித்தியம் அயன் பொலிமர் (Lithium-ion Polymer) மின்கலமும் 32 KW மின்னியல் மோட்டரும், ஆறு வேகங்களுடன் இரண்டு Clutch கொண்ட Gear box மூலமாக வாகனத்தைக் கொண்டு செல்கின்றன. 1.6 லீற்றர் GDI (gasoline direct injection – நேரடி பெற்றோல் செலுத்துகை) இயந்திரத்தோடு, KIA வின் தனித்துவ அழகையும், வலிமையான வடிவமைப்பும் நிஜ உலகில் பயன்பாட்டையும் மிகச்சிறந்த எரிபொருள் பாவனையையும் இவ்வாகனம் வழங்குகின்றது.

பெரும் மகிழ்ச்சியை வழங்குகின்றதும் பல்பயன்பாடு கொண்டதும் சிக்கனமானதும் பார்ப்பதற்கும் ஓட்டுவதற்கும் பிரியத்தை வழங்கக்கூடியதுமான ஹைபிரிட் (Hybrid) வாகனமொன்றை உற்பத்தி செய்வதற்கு KIA நிறுவனத்தால் பல்லாண்டு காலமாக மேற்கொள்ளப்பட்ட கடின உழைப்பின் பலனாக Kia Niro உருவானது. இவ் வாகனமானது இதற்கென விசேடமாக வடிவமைக்கப்பட்ட, புத்தாக்கமான ஹைபிரிட் கட்டமைப்பு மூலம் அதிக சக்தி வாய்ந்த தன்மையும் வாகனம் ஓட்டுதலில் அனுபவத்தையும் வழங்குகிறது.

அதிக இடவசதி உடன் கொண்ட ஐந்து பேர் இலகுவாக அமரக்கூடிய வடிவமைப்பும், 1,300 கிலோகிராம் வரை ஏற்றிச்செல்லக்கூடியதான திறன், ஆகியன, ஹைபிரிட் SUV வாகனத்தைப் பொறுத்தவரை விசேஷமான சிறப்பம்சமாக காணப்படுகின்றது. வாகன பூகோள அபிவிருத்தித் திட்டமானது இவ்வாகனத்தை ஐரோப்பா, வட அமெரிக்கா, தூர கிழக்கு ஆகிய இடங்களில் சோதித்ததின் விளைவாக தடங்கலில்லாத சொகுசுப் பயணத்தையும் சிறந்த கையாளுதலையும் மற்றும் உயர் ஸ்திரத்தன்மையும், அதனுடைய முழுமையான சுயாதீனமான சஸ்பென்ஸன் மூலமாகக் கிடைக்கப் பெறுகின்றது என இனம் கண்டுள்ளது.

Niro வின் ஊடகங்களுக்கான அறிமுகத்தில் கருத்துத் தெரிவித்த Kia Motors (லங்கா) நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. மஹேன் தம்பையா, ‘மிகச்சிறந்த எரிபொருள் பயன்பாடு, சிறுஅளவிலான SUV வாகனங்களின் பயன் ஆகியவற்றுக்கிடையில் காணப்பட்ட இடைவெளியைக் குறைப்பதற்காக Niro உருவாக்கப்பட்டது. இலங்கையில் அதனுடைய அறிமுகமானது, உள்நாட்டுச் சந்தையில் KIA வின் முன்னேற்றத்தின் மகிழ்ச்சியைத் தூண்டுகின்ற புதிய படியாக அமைந்துள்ளது. மேலும் இதன் அறிமுகத்தின் மூலம் KIA வணிகக்குறியின் மதிப்பானது அதன் செயல்திறன் பொருளாதார ரீதியாகவும் நிலையான தன்மை காரணமாகவும் மறுமுறையும் ஐரோப்பா மற்றும் உலக சந்தையிலும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டுச் சந்தையில் Niro வின் திறனைப் பற்றி நாங்கள் மிகவும் மகிழ்வடைகிறோம்” என்றார்.

Niro வினுடைய சிறந்த வசதிகளுக்கு மேலதிகமாக, இன்னொரு முக்கியமான விடயமும் அதற்குக் காணப்படுகிறது: அனைத்து வரிகளும் உள்ளடங்கலாக அது வெறுமனே 9.5 மில்லியன் ரூபாயாக அமைகிறது. Niro EX ஆனது உலகத்தரமான வசதிகளான ABS மலைத் தொடக்க உதவிக் கட்டுப்பாடு (Hill Start Assist Control – HAC), வாகன ஸ்திரத்தன்மை முகாமைத்துவம் (VSM), இரட்டைக் காற்றுப் பைகள், 8 அங்குலத் தொடுதிரையுடன் கூடிய வானொலியும் ஒலிக் கட்டமைப்பும், வழிகாட்டலுடன் கூடிய பின்செல்வதற்கான கமெரா, steering column tilt and telescopic சரிசெய்தல் பவர் ஸ்டியரிங், மின்தடையுடன் கூடிய 4.2 அங்குலமான supervision cluster, ஸ்மார்ட் சாவியுடனும் immobiliser உடனான பொத்தான் ஸ்டார்ட்டும், தானியங்கிய காலநிலை மாற்ற இரட்டை வலய AC 18 அங்குல கலப்புலோகச் சில்லுகள் (alloy wheels, பிரகாசமான LED முன்விளக்குகள், தனியான LED பகல்நேர ஓட்ட விளக்குகள், LED நிறுத்தல் விளக்குகள், பின்புற இணைந்த LED விளக்குகள், பனிமூட்டத்துக்கான LED விளக்குகள், தோலான வாகன இருக்கைகள், முதுகுக்கு ஆரோக்கியமான வசதியைக் கொண்ட சாரதியின் இருக்கை, தானியங்கி வெளிச்சக் கட்டுப்பாடு, தானியங்கி வேகக்கட்டுப்பாடு மற்றும் சாரதி வகைத் தெரிவு எனப் பலவற்றைக் கொண்டுள்ளது.

Niro வாகனமானது ஐந்து ஆண்டுகள் அல்லது 150,000 கிலோமீற்றர் என்ற உத்தரவாதத்தைக் கொண்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

.