Honda மோட்டார் சைக்கிள்கள்: நிறுவனங்களுக்கேற்ற சிறந்த தெரிவு

Stafford Motor Company Sri Lanka நிறுவனத்தால் இலங்கையில் விநியோகிக்கப்படும் Honda மோட்டார் சைக்கிள்களின் CB Shine 125CC மற்றும் CD Dream 110CC அடங்கலான executive வரிசை மாதிரிகள், நிறுவனங்கள் மற்றும் கொள்வனவு செய்பவர்களின் முதற்தர தெரிவாக உள்ளன.

“Honda CD Dream மற்றும் CB Shine இரண்டும் தொந்தரவு இல்லாத மற்றும் நீடித்த பாவனைக்கான மோட்டார் சைக்கிள்கள் ஆகும். இவை பல சூழல் நட்புறவான அம்சங்களுடன் தினசரி பயணத்திற்கென வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், பாவனையாளர்களுக்கு குறைந்த செலவினை உறுதிசெய்யும் பொருட்டு  அதிகபட்ச எரிபொருள் செயல்திறனை உறுதிசெய்கின்றன. Honda CD Dream மற்றும் CB Shine ஆகியவற்றின் கோரப்படும் மைலேஜ் லீற்றருக்கு 72 கிலோ மீற்றராகும். நிறுவனங்களுக்கான கொள்வனவின் போது இந்த இரு மோட்டார் சைக்கிள்களும் முதற்தர தெரிவாக கருதப்படுகின்றன. குறிப்பாக இளம் அதிகாரிகளுக்கு ஏற்றதாக உள்ளன. மேலும் இவ் இரண்டு மோட்டார் சைக்கிள் மாதிரிகளும் உயர்ந்த மீள்விற்பனை பெறுமதியைக் கொண்டவை. எனவே இது நிறுவனங்களுக்கும், தனிநபர்களுக்கும் சிறந்த முதலீடு,” என இலங்கையில் Honda வின் அங்கீகாரம் பெற்ற ஏக விநியோகஸ்தரான Stafford Motor Co.(Pvt) Ltd  இன் பணிப்பாளர்/பிரதான செயற்பாட்டு அதிகாரி – சாரக பெரேரா தெரிவித்தார்.

Honda CD Dream மாதிரியானது Honda Eco Technology (HET)  தொழில்நுட்பத்துடன் கிடைக்கின்றது, குறைந்த உருட்டல் எதிர்ப்பு டயர்கள், 4–stroke, 8.31bhp சக்தியை பிறப்பிக்கும் பொருட்டு சீர்படுத்தப்பட்டுள்ள ஒற்றை சிலிண்டர் HET என்ஜின் மற்றும் 9.09 Nm முறுக்கு விசை. சக்தியானது நான்கு – speed transmission மூலமாக பின் சக்கரத்துக்கு அனுப்பப்படுகின்றது. Honda CB Shine, BS IV என்ஜின் மற்றும் auto headlamp ஐக் கொண்டுள்ளது. CB Shine, 125cc பயணிகள் மோட்டார் சைக்கிள் என்பதுடன்,  இதன் ஜப்பானிய தயாரிப்பாளரின் படி இது சிறந்த செயற்திறன் மற்றும் வினைத்திறனின் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிளானது 124.7cc  ஒற்றை சிலிண்டர் air-cooled HET என்ஜின் மூலம் இயங்குவதுடன், 10.16bhp  மற்றும் 10.30Nm முறுக்கு விசையையும் வெளியேற்றுகின்றது. Honda CB Shine 2 வெவ்வேறு நிறங்களில் கிடைப்பதுடன், Honda Dream 3 வெவ்வேறு நிறங்களில் கிடைக்கப் பெறுகின்றது.

இந்த எரிபொருள் வினைத்திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை முதல் சேவை வரை- 4000 கி.மீ. தூரம் ஓட்ட முடியும், அதே நேரத்தில் சந்தையில் கிடைக்கும் ஒரு சாதாரண மோட்டார் சைக்கிளுக்கு 2500 கி.மீ பயணத்தை பூர்த்தி செய்தவுடன் சேவை தேவைப்படும். Alloy Wheels மிகவும் கடினமானவை என்பதால், Honda Dream மற்றும் Honda CB இரண்டும்  அதிக வேகத்தையும் , அதிகளவு குதிரைவலு மற்றும் முறுக்குவிசையையும் எளிதில் கையாளக்கூடியன. உறுதியான, வளையாத alloy wheels, Honda CD Dream மற்றும் Honda CD Dream இரண்டையும் நம்பிக்கைக்குரியதாக்குகின்றது.

Leave A Reply

Your email address will not be published.

.