​இலங்கையில் வெற்றித்தடம் காணும் surfing கலாச்சாரத்திற்கு வித்திடும் ரெட் புல்  Ride My Wave 2019…

டிசம்பர் மாதத்தில், ரெட் புல் ரைட் மை வேவ் இலங்கையில் தனது நான்காம் அத்தியாயத்தைக் கண்டுள்ளது. இலங்கையின் தென் கடற்கரைப்பகுதியின் சிறந்த கடற்கரை பிரதேசமான ஹிக்கடுவவில் டிசம்பர் மாதம் 7ஆம் மற்றும் 8 ஆம் திகதிகளில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது. இவ் சர்ஃபிங் போட்டியில் அனைத்து மட்டத்திலும் உள்ள திறன் சார் போட்டியாளர்கள் பங்குபெற்றனர். இப்போட்டியானது எமது நாட்டிலும் சர்வதேச மட்டத்திலான போட்டியாளர்கள் என அனைவருக்குமான திறன் காண் போட்டியாக திகழ்ந்தது. சவால்களெனும் எதிர் அலைகளை வென்று இலக்கினை காணும் குறிக்கோளுடைய அனைவருக்கும் ஓர் மிகச்சரியான வாய்ப்பாகவும் திகழ்ந்தது.


ரெட் புல் தொடர்ச்சியாக உலகளாவிய ரீதியில் விளையாட்டுத் துறையினை உந்தித்தள்ளி அதனை வளர்ச்சிப்பாதைக்கு இட்டுச் செல்ல முனைப்புடன் திகழ்ந்து வருவதுடன், இலங்கையிலும் அதற்கான வழிவகைகளை மேற்கொள்வதிலும் மிக முனைப்புடன் செயற்பட்டு பெரும் செல்வாக்குடனும் திகழ்கின்றது. ரைட் மை வேவ் அதற்கோர் சான்றாகும். கிழக்கு மற்றும் தென் பகுதிகளில் கடந்த காலங்களில் நடாத்தப்பட்டு அவற்றிற்கு சான்றாக விளையாட்டுத்துறையில் பல வாசல்களை திறந்து நாடளாவிய ரீதியில் புகழ் பரவியுள்ளது. கடந்த கால வெற்றியாளர்களாகிய கிழக்கு பகுதி அணி, அசங்க (2015), லக்கி டி.ஏ. (2016) மற்றும் மாட்டடியா பொரியிர் (2018)ஆகியோரை இங்கு உதாரணங்களாக குறிப்பிடலாம்.

ரெட் புல் ரைட் மை வேவ் இலங்கையில் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்யவும், சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு உதவும் நோக்குடனும் மற்றும் சர்ஃப் விளையாட்டுக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் நோக்குடனேயே நடாத்தப்படுகின்றது. பிரமிப்பும் பிரமாண்டமும் மிக்க இவ்வெற்றிகரமான 2 நாள் போட்டி நிகழ்வின் பின், ரெட் புல் மீண்டும் ஒருமுறை அதன் வெற்றித்தடத்தை நிரூபித்துள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.
இந்நிகழ்வானது பல கேளிக்கை நிகழ்வுகளுடனும் பல ஆச்சிரியமளிக்கும் பல நிகழ்வுகளுடனும் வயது வரம்பற்ற அனைவருக்கும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்வாக அமையப்பெற்றது. இலங்கை மற்றும் வெளிநாட்டவர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து இலங்கையில் கடல் அலைக்கடக்கும் போட்டியில் பங்குபெற்றவர்களை உற்சாகமளித்தனர். அத்துடன். இவ் ஆண்டு நடைபெற்ற போட்டி நிகழ்வானது பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையற்ற ஒரு நிகழ்வாக நடந்தேறியது. சுற்றுச்சூழல் மாசடைவதை தவிர்க்கும் முகமாக இம்முறை மிக நேர்த்தியாக பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கும் இத்திட்டம் செயல்முறைப்படுத்தப்பட்டது.

இலங்கையில் சர்ஃபிங் வரலாற்றில் ஓர் புதுத்தடத்தை பதிக்கும் முயற்சியாக ரைட் மை வேவ் போட்டியில் பெண்களுக்கு களம் கண்டிடும் வாய்ப்பும் இம்முறை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். ஆணாதிக்கம் மிக்க விளையாட்டுத் துறையில் பெண்களாளும் மிளிர்ந்திட முடியும் எனவும் போட்டிக்களம் கண்டு வெற்றித்தடம் பதித்திடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அத்துடன், ரெட் புல் ரைட் மை வேவ் இலங்கையில் சர்ஃபிங் போட்டிக் கலாச்சாரத்தை உருவாக்குவதில் வெற்றிக்கண்டுள்ளதுடன், முன்பை விட அதிகளவான சர்ஃபிங் போட்டிக்கு ஆர்வலர்களை ஈர்த்துள்ளதென்பதை இங்கு காண முடிந்தது.

பெண்கள் பிரிவில் வெற்றியாளராக நிகிதா ரொப் தெரிவுசெய்யப்பட்டார், நிகோல் ஜென்சன் மற்றும் சாரா செவ் 2ஆம் மற்றும் 3 ஆம் இடங்களை முறையே வென்றெடுத்தனர். ஆண்கள் பிரிவி; லக்ஷித்த மதுஷான் வெற்றியாளராக தெரிவுசெய்யப்பட்டதுடன் நதின் சம்பத் மற்றும் டேவிட் சொலமன் 2ஆம் மற்றும் 3 ஆம் இடங்களை வென்றெடுத்தனர். இறுதியாக லக்ஷித்த மதுஷான் மற்றும் நிகிதா ரொப் இருவருக்கும் King and Queen of the Wave 2019 இற்கான வெற்றி மகுடம் சூட்டப்பட்டது. 2ஆம் நாள் நிகழ்வானது உலகம் முழுவதிலுமிருந்து100 பங்கேற்பாளர்களுடன் மிகக் கடுமையான போட்டியாக திகழ்ந்தது. மதிப்பீட்டு வரைகூறுகள் மிகவும் நம்பமுடியாதளவுக்கு உயர்ந்திருந்தது.

போட்டியாளர்கள் 0.1-10 எனும் அளவில் மதிப்பெண்களை பெற்றிருந்தனர். தலைமை நடுவர் லஹிறு விஜேசேகர மிகத் திறமையான முறையில் தீர்ப்பை வழங்கினார். இவர்​ ISA  சர்வதேச முதல் தர நடுவராவர். மேலும் இந்நிகழ்வு மிகவும் அனுபம் வாய்ந்த போட்டி இயக்குனர் ஜி.பி.ஜி. சந்திக்க துஷார அவர்களின் உறுதுணையுடன் நடந்தேறியது. இவர் இலங்கையின் முதல் சர்வதேச சர்பிங் சாம்பியன் பட்டத்தை வென்றவராவார்.
இப்போட்டி நான்கு சுற்றுக்களை கொண்டிருந்தது. இது கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு வழிவகுத்தது. போட்டியாளர்கள் அலைகளின் நடுவே வேகம், பலம் மற்றும் அலைகளுக்கேற்றவாறான போக்கு என அனைத்தையும் எதிர்கொண்டு கடுமையான தருணங்களை தகர்ந்தெறிந்தனர்.புதுமையான மற்றும் முற்போக்கான சர்பிங் முறைமை மற்றும் பலவிதமான திறமைகளை கையாளும் முறைமைகள் என சர்பிங் போட்டியாளர்களின் பங்களிப்பானது​ ​இம்முறை மிக துல்லியமாக கவனிக்கப்பட்​டு புள்ளிகள் வழங்கப்பட்டது.
ரெட் புல் ரைட் மை வேவ் 2019 தென் கடற்கரை பிரதேசங்களில் உள்ள சர்பிங் சமூகத்தினரை ஒன்றிணைத்து உற்சாகமளித்து அவர்களின் வெற்றிக்கு பங்காற்றியதில் மிகவும் உன்னதமான வெற்றியை கண்டுள்ளதுடன் சர்பிங் போட்டி இலங்கையில் ஓர் முக்கிய விளையாட்டாக நிலைநிறுத்திட முயன்றுள்ளதென்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Leave A Reply

Your email address will not be published.

.