இலங்கையில் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரத்தின் புதுமையான மற்றும் சவாலான பாதைக்கான விழிப்புணர்வு

குடும்பத் திட்டமிடல், பாலியல் மற்றும் இனவிருத்திச் சுகாதாரம் மற்றும் நலன்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் நாட்டின் மிகவும் முக்கியமான அரச சார்பற்ற நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீ லங்கா குடும்பத்திட்டச் சங்கமானது (எப்.பி.ஏ), இலங்கையில் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார ஆராய்ச்சி: தற்போதைய நிலை, சவால்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் (2010 – 2019)” என்ற தலைப்பில் புத்தகமொன்றை எப்.பி.ஏ அரங்கத்தில் வெளியிட்டது.


இந்த வெளியீடானது ஸ்ரீ லங்கா குடும்பத்திட்டச் சங்கத்திற்கு ஒரு மைல்கல்லாகும். தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள சர்வதேச திட்டமிடப்பட்ட பெற்றார்துவ சம்மேளனத்தின் (ஐ.பி.பி.எப்) முக்கிய உறுப்பினரான ஸ்ரீ லங்கா குடும்பத்திட்டச் சங்கத்திற்கு இது ஒரு மைல்கல் வெளியீடாகும், ஏனெனில் இது நீண்டகாலமாக அவ்வமைப்பின் நோக்கமாக இருந்து வந்துள்ளது. 2010 – 2019 ஆண்டுக்காலப்பகுதிக்கான மாநாடுகள் மற்றும் உள்நாட்டு மற்றும் நாளேடுகளில் எப்.பி.ஏ இனால் பிரசுரிக்கப்பட்ட மற்றும் முன்வைக்கப்பட்ட முக்கிய சுருக்கங்களையும் உள்ளடக்கியிருந்தது. மேலதிகமாக, இது பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம், குடிவிபரவியல், சமூகவியல் போன்ற பலதரப்பட்ட பாடத் துறைகளில் திறமை மற்றும் அனுபவத்துடன் கூடிய தகுதிவாய்ந்த எழுத்தாளர்களின் பல ஆய்வுக் கட்டுரைகளையும் தொகுத்துள்ளது.

ஒட்டு மொத்தமாக, பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியமானது பாலினம், இனம், மதம் மற்றும் பாலியல் ஆகியவற்றுடன் நெருக்கமாகப் பிணைந்திருப்பதால் ஒரு குறுக்குவெட்டு பார்வை தேவை என்பதை இந்த வெளியீடு நிரூபிக்கிறது.

“பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் உரிமைகளில் பணியாற்றுவதில் கவனம் செலுத்தும் பிரதான அரச சார்பற்ற அமைப்பான எஃப்.பி.ஏ இலங்கை அதன் முக்கிய கடமைகளில் ஒன்றாக மூலோபாய தரவுகளை முகாமைத்துவம் செய்வதனை கருதுகின்றது. இதுவரை, எங்கள் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவு தொடர்ந்து எஸ்.ஆர்.எச்.ஆர் திட்டங்களை வடிவமைப்பிலிருந்து செயல்படுத்தல் நிலைகள் வரை நாட்டுக்கு அறிவிக்க, அது தொடர்புடைய தரவுகளை சேகரித்து, தொகுத்து வெளியிட்டு வருகின்றது. பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் தொடர்பான விடயப்பரப்புகளில் உள்ளடங்கும் பல கூறுகள் குறித்து பிரபல வல்லுநர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுகளின் தொகுப்பை முன்வைப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்”, என எப்.பி.ஏ ஸ்ரீ லங்காவின் இலங்கைக்கான நிறைவேற்றுப் பணிப்பாளர், துஷார ரனசிங்க எகஸ் தெரிவிக்கின்றார்.
கொழும்புப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் லக்ஷ்மன் திசாநாயக்க பிரதான பேச்சாளராக கலந்து கொண்டார்.

அவர் இதன்போது இலங்கையில் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார ஆராய்ச்சியின் தற்போதைய நிலை, சவால்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் தொடர்பில் உரையாற்றினார். “உள்ளூர் சூழலில், இந்த விடயங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் சட்டரீதியான தாக்கங்கள் மற்றும் குறிப்பாக பாதுகாப்பற்ற கருக்கலைப்பை தடுத்தல், பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம், பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் பாலியல் மூலம் பரவும் நோய்த்தொற்றுகள், இலங்கையில் எச்.ஐ.வி மற்றும் இவை தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்தல் போன்ற விடயங்கள் உணர்வுமிக்கவையாக கருதப்படுவதால் இவை பொதுமக்களுக்கு மிகவும் தூரமாகியுள்ளது. இதன் காரணமாகவே இலங்கையில் எப்.பி.ஏ ஸ்ரீ லங்காவின் பணி மிகவும் தீவிரமானதாகவும், முக்கியத்துவம் மிக்கதாகவும் கருதப்படுகின்றது. இந்த வெளியீட்டின் மூலம், இந்த முக்கிய விடயங்கள் தொடர்பிலான அளவறி ஆய்வு, மற்றும் பண்பறி ஆய்வு சார்ந்த தகவல்களை மக்களுக்கு வழங்குகிறார்கள்”, என பேராசிரியர் திசா தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் சிறப்பு பேச்சாளர்களாக ஓய்வு பெற்ற பேராசிரியர் இந்திரலால் டி சில்வா, மூலோபாய ஆய்வுகளுக்கான பிராந்திய மத்திய நிலையத்தின் பணிப்பாளர், கலாநிதி. லக்ஷ்மென் சேனாநாயக்க, இலங்கை மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவக் கல்லூரியின் முன்னாள் தலைவர் Dர். அஜித் கரவிட்ட, ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன், பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் பாலியல் ஆரோக்கியம், பாதுகாப்பற்ற கருக்கலைப்பு தடுப்பு, கருத்தடை, இலங்கையில் இளைஞர்கள் மற்றும் தற்போதைய நிலை, இலங்கையில் எச்.ஐ.வி / எஸ்.டி.ஐயின் இடைவெளிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் உள்ளிட்ட பல கருப்பொருள்கள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தனர்.

இந்த வெளியீடானது பாதுகாப்பற்ற கருக்கலைப்பை தடுத்தல், பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம், பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் பாலியல் மூலம் பரவும் நோய்த்தொற்றுகள் மற்றும் இலங்கையில் எச்.ஐ.வி போன்ற முக்கிய கருப்பொருள்களை இந்த வெளியீடு உள்ளடக்கியிருந்தது. இதன்மூலம், இந்த ஆண்டு மக்கள் தொகை மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச மாநாட்டின் (ஐ.சி.பி.டி) 25 வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது, மேலும் இந்த வெளியீடு ஐ.சி.பி.டி.யின் முக்கிய அம்சங்களை நினைவுகூறும். தற்செயலாக, இலங்கையில் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தின் தற்போதைய நிலை பற்றிய ஆழமான பகுப்பாய்வாக அதன் சவால்கள் மற்றும் வழிகாட்டுதல்களை இது கணக்கிடுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.

.