Google Playstore மூலம் நேரடியாக கட்டணம் செலுத்த Airpay முறையை அறிமுகம் செய்யும் Airtel…

​​அண்மையில் ஈ-விளையாட்டை தேசிய விளையாட்டாக அறிமுகம் செய்த முதலாவது ஆசிய நாடாக இலங்கை காணப்படுவதோடு 32 மில்லியன் கையடக்க தொலைபேசி பாவனையாளர்களுடன் டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாம் வேகமாக பயணிக்கின்றோம்.

Apps தற்போது மிகப்பெரிய வர்த்தகம் என்பதுடன், உள்ளக வீடியோ விளையாட்டு வர்த்தகம், பொழுதுபோக்கு ஆகிய பிரிவுகளை மேம்படுத்துவதற்கு பாரிய பங்களிப்பை செய்கின்றது. எனினும், கட்டுப்படுத்தப்பட்ட பாரம்பரிய கட்டணம் செலுத்தும் முறையான  cash-on-delivery மற்றும் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட வங்கி வைப்பு போன்ற டிஜிட்டல் அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதற்காக பல தடைகள் காணப்பட்டன.
 இவ்வறானதொரு பின்னணியில் Apps உடன் கொடுக்கல் வாங்கல் செய்வதற்கு நாம் தயாரா என கேள்வியொன்றை கேட்கவேண்டியுள்ளது.
எனினும்  Airtel  இன் “Airpay” நேரடி கட்டணம் செலுத்தும் சேவை (Direct Carrier Billing – DCB) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதனால் இலங்கையின் இளைய சமூகம் அதில் ஈடுபட்டுள்ளதுடன் வலையமைப்பின் ஊடாக கொடுக்கல் வாங்கல்களை செய்வதற்கு அக்கறை காட்டுவதை காணக்கூடியதாக உள்ளது.
ஏனெனில் நம்பிக்கையான அத்தாட்சியை அளிக்கக் கூடிய இலகுவான ஆரம்பம் ஒன்றே அவர்களுக்கு தேவைப்பட்டதோடு,  Airtel “Airpay” ஊடாக அவர்களது தேவை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சேவையின் சிறப்பு என்னவென்றால் இந்த சேவையை அறிமுகம் செய்த 2017ஆம் ஆண்டு முதல் இலங்கையிலுள்ள இளைய சமூகத்தினர் Airpay ஊடாக Google Playstore மூலம் மேற்கொள்ளும் கொடுக்கல் வாங்கல்கள் சாதனைப் படைக்கும் வகையில் 10 மடங்கில் அதிகரிக்கப்பட்டுள்ளமை இதற்குச் சான்றாகும்.
Airtel  இன் Airpay  மற்றும் நேரடி கட்டணம் செலுத்தும் சேவை (DCB) முறை என்றால் என்ன?
2017ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட  Airpay இலங்கை வர்த்தகத் துறைக்கு அறிமுகமான முதலாவது நேரடி கட்டணம் செலுத்தும் சேவை முறையாகும். DCB என்பது வலையமைப்பின் ஊடாக கட்டணம் செலுத்தும் முறை என்பதுடன் பயனர்கள் தமது தொலைபேசி கட்டணத்தில் சேரும் விதமாக அல்லது முன்கொடுப்பனவு நிலுவைகளைப் பயன்படுத்தி  Google Playstore ஊடாக தமது கொள்வனவு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
அத்துடன் தாமதம், விலைகொடுத்து வாங்குவதை தவிர்த்தல் தொடர்பாக பணத்தை மீளப் பெற்றுக்கொள்ளும் முறையொன்று  Airtel Airpay இல் உள்ளது. அதில் ஏதாவதொரு பொருளை அல்லது சேவையைப் பெற்றுக்கொண்டவுடன் உடனடியாக Appஇல் பணத்தை மீளப் பெறுதல் இல்லாவிட்டால் கொடுக்கல் வாங்கலை மாற்றியமைப்பதற்கான அடையாளம் காணப்படுவதோடு அது இரண்டு மணிநேரம் வரை நீடிக்கும். அத்துடன் பயனர்களுக்கு அவர்களது  Google Play Store கணக்கிலுள்ள பொருள் வழங்குவதற்கான உத்தரவு (Order) பட்டியலில்  Airtpay இல் விலைக் கொடுத்து வாங்குவது குறித்து முழுமையான விபரமொன்றை வைத்திருப்பதற்கான சாத்தியமும் உள்ளது.
Airtpay எந்தளவு பாதுகாப்பானது?
Airtel Airpay  கொடுக்கல் வாங்கல்களின் போது பாதுகாப்பான பல வழிமுறைகள் இருப்பதனால் உங்களது பணத்தை மோசடி செய்துவிடுவார்கள் என்ற அச்சம் அடைய எந்த காரணமும் இல்லை. எந்தவொரு பொருளை வாங்குவதற்கு முன்பும் பயனரினால் தமது Google  கணக்கின் இரகசிய குறீட்டை (Password) பயன்படுத்தி உங்களது அடையாளம் உறுதிப்படுத்தப்படும். Airtel Airpay நேரடியாக உங்களது தொலைபேசி கணக்கு தொடர்பில் இருப்பதுடன் DCB சேவையை உங்களது அட்டையின் விபரங்கள் அல்லது வேறொரு நபரின் எவ்வித தகவல்களும் உங்களிடம் கேட்கப்பட மாட்டாது. தெளிவாகக் கூறினால் உங்களது கொடுக்கல் வாங்கல் தொடர்பான எந்தவொரு தகவலை பெற்றுக் கொள்ளவோ அல்லது மூன்றாவது தரப்புடன் பரிமாறிக்கொள்ளும் நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்பட மாட்டாது. இதன்பொருள், ஈ-வொலட் அல்லது கார்ட் பயன்படுத்தும் போது எதிர்காலத்தில் அகற்ற வேண்டிய நிலையான தகவல்கள் எதுவும் இருக்காது என்பதாகும்.
DCB இவ்வளவு பிரபல்யமடைந்திருப்பது ஏன்?
Google Playstore இல் ஷாப்பிங் செய்வதற்கு  Credit Card மற்றும் Debit Card Credt Card வங்கிக் கணக்கொன்றோ தேவையில்லை. Online ஊடாக கொள்வனவு செய்யும் ஒட்டுமொத்த இளைஞர் சமூகத்திற்கும் இதுவொரு நல்ல செய்தியாகும் என்பதுடன் தமது தனிப்பட்ட தகவல்களை திருடுதல், கொள்வனவின் போது ஏற்படும் தாமதம், மேலதிக வங்கிக் கட்டணம் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் எவ்வித அச்சமும் கொள்ளத்தேவையில்லை.
தற்போது இலங்கையிலுள்ள இளைஞர் சமூகம்  Online ஊடாக அதுவும் இல்லாமல் வலையமைப்பின் ஊடாக பொருட்களை கொள்வனவு செய்வதற்காக அதிகமாக தூண்டப்படுவதை காண முடிகின்றது. அதன்போது கடன் அட்டை அல்லது வேறு செலுத்தும் முறைகள் தொடர்பாக வசதிகள் இல்லாத இளைய சமூகத்தினருக்கு இதனூடாக தமது தேவைகளை மிகவும் இலகுவாக மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் கிட்டும். அத்துடன் சில நிதி நடவடிக்கைகள் தொடர்பில் தேவையான அடிப்படை வசதிகளை வழங்காத பாடசாலை வயதில் அல்லது வேலை வாய்ப்பை எதிர்பார்த்துள்ள நபர்களுக்கு Airtel Airpay ஊடாக தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் சந்தர்ப்பம் கிட்டும்.
Airpayஐ பயன்படுத்துவது எவ்வாறு?
பாவனையாளர்களுக்கு மிகவும் இலகுவாக Airpay ஊடாக தொடர்புபட முடியும் என்பதுடன் உங்களிடம் உள்ள Airtel சிம் கார்ட் இருக்குமானால் நீங்கள் செய்ய வேண்டியது  Google Play கணக்கு மெனுவுக்கு சென்று அதிலுள்ள ‘Use Airtel Billing’ இல் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம். பின்னர் உங்களுக்கு தேவையான பொருள் அல்லது சேவையை தெரிவு செய்ததன் பின்னர் ‘BUY’ஐ க்ளிக் செய்ய வேண்டும். பின்னர் ‘Bill my Airtel account’ ஐ க்ளிக் செய்து பின்னர் Google கணக்கு இரகசிய குறீட்டு சொல்லை டைப் செய்து பொருளை வாங்குவதற்கான உறுதியை வழங்கியதன் பின்னர் நடவடிக்கையை பூர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படும்.

Leave A Reply

Your email address will not be published.

.