2020 ஆம் ஆண்டில் 4.8 மில்­லியன் டொலர் கடனை மீளச்­செ­லுத்த வேண்டும்: பொரு­ளா­தார வளர்ச்சி 4 தொடக்கம் 4.5 வீத­மாக அமையும்

நாடு பாரிய நெருக்­க­டிக்குள் உள்­ளது. ஆண்­டுக்­கான பொரு­ளா­தார வளர்ச்சி கடந்த காலங்­களில் 3 வீதத்­திற்கும் குறைந்த தன்­மை­யையே காட்­டு­கின்­றது. எவ்­வாறு இருப்­பினும் 2020 ஆம் ஆண்டில் ஆண்­டுக்­கான பொரு­ளா­தார வளர்ச்சி 4 தொடக் கம் 4.5 வீத­மாக வளர்ச்சி காணும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. ஜன­வரி மாதத்தில் ஜனா­தி­ப­தி­யினால் அர­சாங்க கொள்கை அறிக்­கை­யொன்று வெளி­யி­டப்­ப­ட­வுள்ள கார­ணத்­தினால் 6 வீத வளர்ச்சி அல்­லது 6.5 வீத வளர்ச்­சியை நோக்கி பய­ணிக்க முடியும் என அர­சாங்கம் கூறு­வ­தா­கவும் அது எந்­த­ளவு சாத்­தியம் என்­பதை பொறுத்­தி­ருந்தே பார்க்க வேண்டும் எனவும் மத்­திய வங்கி ஆளுநர் பேரா­சி­ரியர் டபிள்யூ.டி லக்ஸ்மன் தெரி­வித்தார்.

2020 ஆம் ஆண்­டுக்­கான சர்­வ­தேச கட­னாக 4.8 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் செலுத்­தப்­பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

நிதி­யியல் கொள்கை மீளாய்வு நிலைப்­பாடு குறித்து நேற்று மத்­திய வங்­கியில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் ஆளுநர், பிரதி ஆளுநர், சிரேஷ்ட பிரதி ஆளுநர் உள்­ளிட்ட அதி­கா­ரிகள் குழு கலந்­து­கொண்ட நிலையில் இந்த சந்­திப்பில் கருத்­துக்­களை கூறிய ஆளுநர் ,

ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் அனு­ம­தி­யுடன் ஜனா­தி­பதி செய­லாளர் மூல­மாக பெயர் குறிப்­பி­டப்­பட்டு என்னை மத்­திய வங்கி ஆளு­ந­ராக நிய­மித்­துள்­ளனர். மிகப்­பெ­ரிய பொறுப்­பொன்றை என்­னிடம் கொடுத்­துள்­ளனர். ஆனால் நான் மத்­திய வங்கி விவ­கா­ரங்­க­ளுடன் தொடர்­பு­பட்ட கற்­கையில் செயற்­படும் கார­ணத்­தினால் இது எனக்கு பரீட்­ச­ய­மான ஒன்­றா­கவே கரு­து­கின்றேன். எனவே இத்­தனை கால­மாக கற்­ற­வற்றை இப்­போது என்னால் பரீட்­சார்த்து பார்க்க முடியும். எனினும் முதல் தட­வை­யாக நான் இவற்றை செயற்­ப­டுத்த நிய­மிக்­கப்­பட்­டுள்ளேன். எனவே என்­னுடன் அனை­வரும் ஒத்­து­ழைப்பு வழங்கி செயற்­ப­டு­வீர்கள் என நம்­பு­கிறேன்.

அத்­துடன் நாம் பிர­தா­ன­மான சில விட­யங்கள் குறித்து கவனம் செலுத்­து­கின்றோம். இதில் நிலை­பே­றான உள்­நாட்டு நிதிக் கண்­கா­ணிப்பு மதிப்பு, இலங்­கையின் ரூபாவின் நிலை­யான தன்­மையை பேணல், உற்­பத்தி குறித்த கவனம் மற்றும் நிதி வருகை, வேலை­வாய்ப்பு, சர்­வ­தேச வங்­கி­க­ளுடன் நாம் கையாளும் முறைமை மற்றும் சர்­வ­தேச சந்­தையில் எமது தன்­மையை தக்­க­வைத்தல் என்ற விட­யங்கள் கருத்தில் கொள்­ளப்­படும்.

இலங்­கையின் பொரு­ளா­தார நிலை­மை­யா­னது 2019 ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டில் 2.7சத­வீத மந்­த­மான வளர்ச்­சி­யையே பதிவு செய்­துள்­ளது. இதற்கு வேளாண்மை மற்றும் சில அசா­தா­ரண நிலை­மைகள் கார­ண­மாக அமைந்­துள்­ளன.

பண வீக்கம் தாழ்ந்த மட்­டத்தில் காணப்­ப­டு­கின்­றது. வரி நீக்கம் மற்றும் பொரு­ளா­தார நிலை­மைகள் இதற்கு கார­ண­மாக அமைந்­துள்­ளன. நடுத்­தர கால­கட்­டத்தில் இது வளர்ச்சி காணும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அதேபோல் அதி­க­ரித்த இறக்­கு­மதி வீழ்ச்சி மற்றும் பற்­றாக்­கு­றை­யான ஏற்­று­மதி கார­ண­மாக இந்த ஆண்டில் முதல் 10 மாதங்­களில் வர்த்­தக பற்­றாக்­குறை 2.4 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளினால் குறை­வ­டைந்­துள்­ளது. சுற்­று­லாத்­து­றையை பொறுத்­த­வரை உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் படிப்­ப­டி­யான வளர்ச்சி நிலைமை காணப்­ப­டு­கின்­றது. ஆண்டில் 11 மாத அடிப்­ப­டையில் சுற்­று­லாத்­து­றை­யி­னரின் வரு­கை­யா­னது 19.6 சத­வீ­தத்­தினால் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது.

இன்று நாடு பாரிய நெருக்­க­டியில் உள்­ளது. 5 வீதத்­துக்கும் குறை­வான ஆண்­டுக்­கான பொரு­ளா­தார வளர்ச்­சியே காணப்­ப­டு­கின்­றது. கடந்த காலங்­களில் இது 3 வீதத்­திற்கும் குறைந்த தன்­மை­யையே காட்­டு­கின்­றது. ஆகவே இதில் கவனம் செலுத்­தப்­பட வேண்டும். வேலை­வாய்ப்பு இன்மை, வாழ்க்கை செலவு, குறைந்த அள­வி­லான தொழி­லாளர் சக்தி பயன்­பாடு, கற்ற இளை­ஞர்கள் வேளை­களில் ஈடு­ப­டாத உய­ரிய நிலை­மைகள், குறைந்த உற்­பத்தி என்ற விட­யங்­களை அர­சாங்கம் கவ­னத்தில் கொள்ள வேண்டும். இதில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­வதன் மூலமே வறு­மையை குறைக்க முடியும். அத்­துடன் வெளி­நாட்டு முத­லீ­டுகள் சர்­வ­தேச நிதி விட­யங்­களில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். வியா­பார முத­லீ­டு­க­ளுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும்.

எவ்­வாறு இருப்­பினும் 2020 ஆம் ஆண்டில் பொரு­ளா­தார வளர்ச்சி 4 தொடக்கம் 4.5 வீத­மாக வளர்ச்சி காணும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. ஜன­வரி மாதத்தில் ஜனா­தி­ப­தி­யினால் அர­சாங்க கொள்கை அறிக்­கை­யொன்று வெளி­யி­டப்­ப­ட­வுள்ள கார­ணத்­தினால் இதில் பொரு­ளா­தார கொள்கை கட்­ட­மைப்பு மற்றும் நடுத்­தர காலத்தின் கொள்கை போக்கு தொடர்­பி­லான மேல­திக தெளி­வொன்று கிடைக்கும் என மத்­திய வங்கி எதிர்­பார்க்­கின்­றது.

அத்­துடன் தற்­போ­துள்ள வரி கொள்­கையும் பொரு­ளா­தார தன்­மையில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தும் என நம்ப முடியும். இது நடுத்­தர மட்­டத்தில் 4 தொடக்கம் 4.5 வீத பொரு­ளா­தார வளர்ச்­சியை பெறும் வகை­யிலும் பொரு­ளா­தார வளர்ச்­சியை அதன் உத்­வேக மட்­டத்தில் பேணவும் முடியும் என நம்­பலாம். அவ்­வாறு பார்க்­கையில் அர­சாங்கம் கூறு­வ­தற்கு அமைய 6 வீத வளர்ச்சி அல்­லது 6.5 வீத வளர்ச்சி என கூறப்­ப­டு­கின்­றது. அது எந்­த­ளவு சாத்­தியம் என்­பதை பொறுத்­தி­ருந்தே பார்க்க வேண்டும் என்றார்.

செய்­தி­யாளர் சந்­திப்பில் கருத்து தெரி­வித்த சிரேஷ்ட பிரதி ஆளுநர் வைத்­தியர் பி.நந்­தலால் வீர­சிங்க கூறு­கையில்,

மத்­திய வங்கி புதிய மறு­சீ­ர­மைப்பு சட்­ட­மொன்று உரு­வாக்­கப்­பட வேண்டும். அதற்­கான சட்­ட­மூ­லத்தை பாரா­ளு­மன்­றமே கையாள வேண்டும். அர­சாங்கம் சரி­யான கொள்­கை­யொன்றை உரு­வாக்கும் என நினைக்­கின்றோம். அது­மட்­டு­மல்ல எமது ஆண்­டுக்­கான கடன் குறித்தும் கவனம் செலுத்­து­கின்றோம். 2020 ஆம் ஆண்­டுக்­காக நாம் செலுத்த வேண்­டிய கடன் தொகையானது 4.8 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். அடுத்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இதனை செலுத்த வேண்டும். ஆகவே இதனை கையாளும் மாற்று நடவடிக்கைகள் குறித்தும் அரசாங்கம் சிந்திக்க வேண்டும். சர்வதேச நிதி பெறுகை, உற்பத்தி திறன்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். மாற்று நடவடிக்கை எதனை கையாள்வது என்பது குறித்து அரசாங்கம் தீர்மானம் ஒன்றினை முன்னெடுக்க வேண்டும். இந்த ஆண்டில் அரச நிதி விரையம் அதிகமாக இருந்துள்ளது. இதுவும் நெருக்கடிகளுக்கு காரணமாக அமையும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.

.