SAP ACE விருதை வென்ற முதல் இலங்கை நிறுவனமாக Technomedics

இலங்கையில் மருத்துவ உபகரணங்கள் வழங்கல் துறையில் முன்னணி வகிக்கும் நிறுவனமான Technomedics, 13 வது SAP ACE விருது வழங்கும் நிகழ்வில் வாடிக்கையாளர் சிறப்பு- சேவை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.  SAP Business One செயற்படுத்தப்பட்டமையை பாராட்டியே இந்த விருது வழங்கப்பட்டது.

இத் தொழிற்துறையின் முன்னணி நிறுவனமென்ற வகையில் Technomedics, அதன் ஆலோசகரான Ernst & Young இன்  வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையுடன்,  SAP செயல்படுத்தல் பங்காளரான Pristine Solution இன்  ஆதரவின் ஊடாக SAP Business One ஐ செயற்படுத்தியது. இதன் மூலம்  நிறுவனத்தின் வளர்ச்சியை வலுவூட்டுவதுடன், உரிய நேரத்துக்கான மற்றும் மேம்பட்ட வாடிக்கையாளர் உதவியை இயலுமைப்படுத்தும் உலகத்தரம் வாய்ந்த ERP அமைப்பை முறையாக செயற்படுத்தியுள்ளது.
இலங்கையில் SAP Business One ERP தீர்வுகளை நடைமுறைப்படுத்த மிகவும் நம்பிக்கையான தீர்வு வழங்குனரான Pristine Solutions  உடன் Technomedics கைகோர்த்தது.  இந்த செயல்முறைப்படுத்தலானது பாரட்டத்தக்கதொன்றாக கருதப்பட்டதுடன் SAP ACE விருதுக்கான நடுவர் குழாமினால் சிறந்த SAP Business One செயல்முறைப்படுத்தலாக வாக்களிக்கப்பட்டது.
“Technomedics International (Pvt) Ltd இலங்கையில் மிகப்பெரிய மருத்துவ உபகரணங்கள் வழங்குநராகும், இது 1996 இல் நிறுவப்பட்டதுடன், 125க்கும் மேற்பட்ட உலகளாவிய பங்காளர்களுடன் இணைந்து, 250+ ஊழியர்களால் ஆதரிக்கப்படுவதுடன், உள்ளக செயன்முறைகளை துறைசார் சிறந்த நடைமுறைகள் ஊடாக எமது வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்க சரியான அமைப்புகளை நிறுவ முடிந்துள்ளது. எங்கள் சேவையின் தரம் மற்றும் நம்பகத்தன்மை ஆகியன Technomedics  நிறுவனத்தை மருத்துவத்துறை வல்லுநர்கள் மற்றும் மருத்துவ ஒழுங்குபடுத்தல் அதிகாரிகளிடையே பிரபல நாமமாக மாற்றுவதற்கான முக்கிய உந்துதல் காரணியாகும். இதன்மூலம், மதிப்புமிக்க SAP ACE விருதுகள் வழங்கப்பட்டதன் ஊடாக எங்களுக்கு கிடைத்த பாராட்டுகளால் தொடர்பில் பணிவடைகின்றோம்,” என Technomedics International, தலைவர், சுஜித் சமரதிவாகர தெரிவித்தார்.
இதற்கிடையில், கடந்த பத்தாண்டுகளாக இலங்கையில் 150 க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் SAP Business One ERP செயல்படுத்துவதில் வெற்றிகரமான SAP செயற்படுத்தல் அனுபவத்துடன் கூடிய அங்கீகரிக்கப்பட்ட Pristine Solutions வழங்கிய நம்பகமான சேவையின் காரணமாக இந்த பாராட்டு சாத்தியமானதென்றும், “இலங்கையில் 100 க்கும் மேற்பட்ட செயற்படுத்தலைக் கொண்ட ஒரே உள்ளூர் SAP பங்காளர் Pristine Solutions (Pvt) Ltd ஆகும். இலங்கையில் 150 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு SAP Business one  மற்றும் அரை டசன் SAP Business By Design ஐயும் வெற்றிகரமாக செயற்படுத்தியுள்ளோம். SAP பங்காளராக பத்து வருட சேவையில், Pristine Solutions 10 தடவைக்கும் மேலாக அதன் செயல்திறனுக்காக SAP இனால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 4 விருதுகள் ஆசிய பசிபிக் மட்ட அங்கீகாரமாகும், ” என Pristine Solutions (Pvt) Ltd, ஆலோசனை பணிப்பாளர், Dr. அஜித் மெண்டிஸ் தெரிவித்தார்.
“Ernst & Young இலங்கையில் பல பெரிய ERP செயற்படுத்தல்களுக்கு ஆதரவளித்ததன் மூலம் பெறப்பட்ட அனுபவமானது இந்த வெற்றிகரமான செயற்படுத்தலுக்கு பெரிதும் உதவியது”, என்று Ernst & Young, பணிப்பாளர், ஷானக டி சில்வா குறிப்பிட்டார்.
மதிப்புமிக்க SAP ACE விருதுகள் இப்போது 12 ஆண்டுகளாக வழங்கப்படுகின்றன – இது அவர்கள் மீதான தெற்காசியாவில் உள்ள அனைத்து SAP வாடிக்கையாளர்களின் ஈர்ப்பு மற்றும் நிலைத்தன்மையின் சான்றாகும். இந்த காலப்பகுதியில், குறைந்தது 1500 வெவ்வேறு திட்டங்கள் SAP வாடிக்கையாளர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், இதில் சுமார் 180 வெற்றியாளர்கள் இறுதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பரிந்துரைகள் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து பரந்த அளவிலான தெற்காசிய நிறுவனங்களை உள்ளடக்கியிருந்தன. அந்த வகையில், மதிப்புமிக்க SAP ACE விருதை வென்ற முதல் இலங்கை நிறுவனமாக Technomedics வரலாற்றில் குறிக்கப்பட முடியும். எனவே இது வெற்றிகரமான SAP Business One செயற்படுத்தலுக்கான அங்கீகாரமாகவுள்ளதுடன், இது இந்திய துணைக் கண்ட நிறுவனங்களில் வணிக மாற்றத்தில் மறுக்க முடியாத ஒரு முக்கிய உந்து சக்தியாக உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

.