கொழும்பிலிருந்து புதிய நேரடி விமான சேவைகளை அறிமுகப்படுத்தும் GoAir

தெற்­கா­சி­யாவில் தனது விரி­வாக்­கத்தின் தொடச்­சி­யாக, ஆசி­யாவின் மிகவும் நம்­ப­க­மான நேரம் தவ­றாமல் இயங்கும் மற்றும் வேக­மாக வளர்ந்து வரும் விமான நிறு­வ­ன­மான GoAir தனது புதிய நேரடி விமா­னங்­களை கொழும்­பி­லி­ருந்து ல்லி மற்றும் பெங்­களூர் ஆரம்­பித்­துள்­ளது.


இலங்கை தலை­நகர் கொழும்­புக்­கான GoAir விமான சேவைகள் 2020 மார்ச் 20ஆம் திகதி முதல் ஆரம்­ப­மாகும். கொழும்பு – டில்லி- கொழும்பு விமான பயண சீட்­டிற்கு 35,512 ரூபா பயண கட்­ட­ண­மா­கவும், கொழும்பு-–பெங்­களூர்–-கொழும்பு விமா­னங்­க­ளுக்கு பயண சீட்டு கட்­ட­ண­மாக 24,900 முதல் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இவை அனைத்தும் கவர்ச்­சி­க­ர­மான மீள் வருகை கட்­டங்­க­ளாக GoAir நிறு­வனம் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.


டில்லி மற்றும் பெங்­க­ளூருக்கு பிர­ப­ல­மான புனித யாத்­தி­ரை­களை மேற்­கொள்ள நேரடி விமான சேவை­களை வழங்­கு­கி­றது. The buddhist circuit என்ற இத் திட்­டத்தில் புத்­த­காயா, வைஷாலி, பீகாரில் ராஜ்கீர் மற்றும் சாரநாத், ஷ்ராவஸ்தி உத்­தி­ரப்­பி­ர­தே­சத்தின் குஷி­னகர் போன்ற இடங்கள் இவற்றுள் அடங்கும்.

மேலும் அமெ­ரிக்­காவை தல­மாகக் கொண்ட அபெக்ஸ் கணக்­கெ­டுப்பில் 1.4 மில்­லியன் பய­ணி­க­ளி­ட­மி­ருந்து நான்கு நட்­சத்­திர மதிப்­பீ­டு­களை பெற்­றுள்­ளது.
ஒட்­டு­மொத்த விமான அனு­பவம், கேபின் சேவை, இருக்கை வசதி, தூய்மை மற்றும் உணவு, பானங்கள் என்­ப­வற்­றிற்­கான மிகச் சிறந்த விமான சேவை­யாக GoAir ஐ பயணிகள் மதிப்பிட்டுள்ளனர். கொழும்பைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் இப்போது Goair இல் பயணிக்கும் போது அதே தரத்திலான மிகச்சிறந்த சேவையை அனுபவிக்க முடியும்.

Leave A Reply

Your email address will not be published.

.