ரோட்டறி பவுண்டேஷனின் தலைவராக தொழிலதிபர் கே.ஆர்.ரவீந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்

இலங்கையின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான கே.ஆர்.ரவீந்திரன் உலகின் மிகப்பெ ரிய அறக்கொடைநிறுவனங்களில் ஒன்றான ரோட்டறி பவுண்டேஷனின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர்  ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் இந்த பதவியை பொறுப்பேற்கவுள்ளார்.
  ரவீந்திரன் இலங்கையின் அச்சுத்துறை மற்றும்பொதியிடல் தொழிற்றுறையில் மிகவும் பெரியஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றான பிரின்ட்கெயார் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாவார்.
2015 இல் சர்வதேச ரோட்டறி கழகத்தின் உலகளாவிய தலைவராகப்பணியாற்றிய அவர், அப்பதவியை வகித்த பதினோராவது ஆசிய நாட்டவராவார்.
அந்தப்பதவியிலிருந்த காலகட்டத்தில் இலங்கையில் பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான மனிதாபிமான செயற்றிட்டங்களை அவர் முன்னெடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

.