2020 இன் இரண்டாம் காலாண்டுப்பகுதியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும் – இலங்கை மத்திய வங்கி

கொவிட் – 19 கொரோனா வைரஸ் பரவல் உலகலாவிய ரீதியில் அண்மைக்கால வளர்ச்சி வாய்ப்புக்களைக் கணிசமானளவிற்குப் பாதித்திருக்கின்ற நிலையில், இலங்கை தொடர்பில் கிடைக்கத்தக்கதாகவுள்ள குறிகாட்டிகள் 2020 இன் இரண்டாம் காலாண்டுப்பகுதியில் பொருளாதார வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்படக்கூடிய தன்மையைக் கொண்டிருப்பதனை எடுத்துக்காட்டுவதாக மத்திய வங்கி தெரிவித்திருக்கிறது.

நேற்று முன்தினம் புதன்கிழமை நடைபெற்ற மத்திய நாணயச்சபையின் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும், துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் 100 அடிப்படைப்புள்ளிகளினால் முறையே 4.50 சதவீதத்திற்கும் 5.50 சதவீதத்திற்கும் குறைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனூடாக சந்தைக்கடன் வழங்கல் வீதங்களை மேலும் குறைப்பதனைத் தூண்டி, அதனூடாகப் பொருளாதாரத்தின் உற்பத்தியாக்கத் துறைகளுக்கான கடன் வழங்கல் தீவிரமான முறையில் அதிகரிப்பதற்காக நிதியியல் முறைமையை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.

இது கொவிட் – 19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கும், பரந்த பொருளாதாரத்திற்கும் வலுவான ஆதரவினை வழங்கும் என்று எதிர்பார்ப்பதாக மத்திய வங்கி தெரிவித்திருக்கிறது.
இதுபற்றி மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள விபரங்களில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

கொவிட் – 19 கொரோனா வைரஸ் பரவல் உலகலாவிய ரீதியில் அண்மைக்கால வளர்ச்சி வாய்ப்புக்களைக் கணிசமானளவிற்குப் பாதித்திருக்கின்ற நிலையில், இலங்கை தொடர்பில் கிடைக்கத்தக்கதாகவுள்ள குறிகாட்டிகள் 2020 இன் இரண்டாம் காலாண்டுப்பகுதியில் பொருளாதார வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்படக்கூடிய தன்மையைக் கொண்டிருப்பதனை எடுத்துக்காட்டுகின்றன.

நாணய ரீதியான ஆதரவு மற்றும் வரித்தூண்டல் என்பவற்றின் ஊடாக ஆண்டின் பின்னரைப்பகுதியில் மீளெழுச்சியொன்று எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், நடுத்தரகாலப்பகுதியில் உயர்வானதும் உறுதியானதுமான பொருளாதார வளர்ச்சியைப் பேணிவளர்ப்பதற்கு ஊக்குவிக்கின்றதும் நம்பிக்கையை அதிகரிப்பதுமான அமைப்பியல் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவது தவிர்க்க முடியாததாகக் காணப்படுகின்றது.

மேலும் உடனடியான பொருளாதார மீட்சியினைக் கருத்திற்கொண்டு இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 300 அடிப்படைப்புள்ளிகளால் குறைக்கப்பட்ட நியதி ஒதுக்கு விகிதத்தின் தாக்கத்தினால் அதிகரித்த திரவத்தன்மை மட்டங்களை உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் தனியார்துறை கடன்பெறுநர்களுக்கு விடுவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தோடு உள்நாட்டு மற்றும் உலகலாவிய பேரண்டப்பொருளாதாரம் மற்றும் நிதியியல் சந்தை அபிவிருத்திகளைத் தொடர்ந்தும் கண்காணிப்பதுடன், ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைகளின் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகள் அடையப்படுவதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மத்திய வங்கி அறிவித்திருக்கிறது. 

 

Leave A Reply

Your email address will not be published.

.