தனியார் துறை ஊழியர்களுக்கு செப்டெம்பர் மாதம் வரையில் சம்பளம் வழங்க தீர்மானம்

கொவிட் 19 தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளத்தை செலுத்துவது தொடர்பில் உடன்பட்ட கால எல்லை செப்டெம்பர் மாதம் வரை நீடிக்கப்பட்டிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் அவர்களது சம்பளத்தின் அரைப்பங்கு அல்லது ஆகக் கூடிய சம்பளமான 14,500 ரூபாவை செப்டெம்பர் மாதம் வரை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பு  அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் அமைச்சர் தினேஸ் குணவர்தன மற்றும் தனியார் துறை நிறுவன உரிமையாளர்களுடன் எட்டப்பட்ட உடன்படிக்கையை செப்டெம்பர் மாதம் வரையில் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு:
12. கொவிட் 19 தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளத்தை செலுத்துவது தொடர்பில் உடன்பட்ட கால எல்லையை நீடித்தல்
சேவைகொள்வோர் (முதலாளிமார்), ஊழியர், தொழில்சங்க மற்றும் திறனாற்றல் அபிவிருத்தி தொழில்வாய்ப்பு மற்றும் தொழிலாளர் தொடர்பு அமைச்சின் அதிகாரிகளுக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடல்களில் எட்டபட்ட உடன்படிக்கைக்கு அமைவாக கொவிட் 19 தொற்றிக் காரணமாக 2020 மே மாதம் மற்றும் ஜுன் மாதம் ஆகிய 2 மாதங்களுக்காக வேலை இல்லாமையினால் ஊழியர்கள் வீடுகளில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்ட நிறுவன ஊழியர்களுக்கு அவர்களுக்கு இறுதியாக செலுத்தப்பட்ட முழுமையான சம்பளம் செலுத்தப்பட்ட மாதத்திற்கு அமைவாக அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதம் அல்லது ரூபா 14,500 என்ற இரண்டிலும் மிகவும் பயனுள்ள தொகையை செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 

மேலும் இதற்கமைவாக செயல்பட்டு 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடக்கம் செப்டெம்பர் மாத கால எல்லைக்காக ஊழியர் சம்பளத்தை செலுத்துவதற்காக தரப்பினருக்கிடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்பாடு தொடர்பாக தகவல்களை திறனாற்றல் தொழில்வாய்ப்பு மற்றும் தொழில்தொடர்புகள் அமைச்சர் அவர்களினால் அமைச்சரவையின் கவனத்திற்கு சமர்பிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

.