இலங்­கையின் சிறந்த வர்த்­தக நாமங்கள் வரி­சையில் சொஃப்ட்­லொஜிக் லைஃப்

உலகின் வர்த்­தக நாம வியா­பார மதிப்­பீடு மற்றும் மூலோ­பாய ஆலோ­சனை நிறு­வ­ன­மான Brand finance இன் புதிய அறிக்­கைக்கு அமைய இலங்­கையின் சிறந்த வர்த்­தக நாமங்கள் வரி­சையில் சொஃப்ட்­லொஜிக் லைஃப் பெய­ரி­டப்­பட்­டுள்­ளது. இலங்­கையின் சிறந்த 50 வர்த்­தக நாமங்­க­ளுக்கு இடையில் சொஃப்ட்­லொஜிக் லைஃப் பெய­ரிட பல­­மான நிதி மற்றும் வாடிக்­கை­யா­ளர்கள் மீது அதிக கவனம் செலுத்­தி­யமை போன்­றன கார­ணங்­க­ளாக அமைந்­துள்­ளன. அத்­துடன் புத்­தாக்க சேவை­களின் அறி­மு­க­மா­னது, சொஃப்ட்­லொஜிக் லைஃப் வர்த்­தக நாமத்தின் பெறு­ம­தியை 14.7% ஆல் அதி­க­ரித்து ரூ.1.2 பில்­லியன் பதி­வா­கி­யுள்­ள­மையும் இன்­னொரு கார­ண­மாகும். இந்த அறிக்­கையில் நிறு­வனம் தொடர்­பாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­துடன் செயற்­பாடு கார­ண­மாக சொஃப்ட்­லொஜிக் லைஃப் பாரிய வரு­வாயை ஈட்­டு­வ­தா­கவும் வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளுக்கு சரி­யான உதா­ர­ண­மாக திக­ழு­வ­தாகவும் கூறப்­பட்­டுள்­ளது. கடந்த பல ஆண்­டு­களில் வர்த்­தகம் மற்றும் வர்த்­தக நாமத்தின் பெறு­மதி அதி­க­ளவு வளர்ச்­சி­ய­டைந்­ததே பிர­தான கார­ணி­க­ளாகும்.

குறு­கிய காலத்தில் நாட்டின் மிகவும் பெறு­ம­தி­யான காப்­பு­றுதி வர்த்­தக நாம­மாக, அதிக போட்­டித்­தன்மை மற்றும் சவால் நிறைந்த துறையில் தேர்வு செய்­யப்­ப­டு­வது இல­கு­வான விட­ய­மல்ல. இலங்­கையில் இளைய காப்­பு­றுதி நிறு­வ­ன­மான சொஃப்ட்­லொஜிக் லைஃப், காப்­பு­றுதி துறையில் மிக வேக­மாக வளரும் மற்றும் புத்­தாக்க சேவை­களை அறி­மு­கப்­ப­டுத்தும் நிறு­வ­ன­மாக உள்­ளது. 18 வரு­டங்கள் என்ற குறு­கிய காலத்தில் எம்­மிடம் ரூ.7.5 பில்­லியன் வருவாய் உள்­ள­துடன் சந்தைப் பங்­கினை இரு­ம­டங்­காக அதி­க­ரித்து 10.5% வரை வந்­துள்­ளது.

துறையின் முழு­மை­யான வருமான வளர்ச்சியைவிட அதிக வளர்ச்சியை தக்க வைத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் துறையின் சாதாரண வளர்ச்சி 12.6 வீதமாக இருந்தபோதிலும் நிறுவனத்தின் வளர்ச்சி 34 வீதமாகும்.

Leave A Reply

Your email address will not be published.

.