வறுமைக் கோட்டின் கீழ் 15 மாவட்­டங்கள்

நாட்டின் 60 சதவீத­மான மாவட்­டங்கள் தொடர்ந்து 29 ஆவது மாதங்­க­ளாக வறுமைக்கோட்­டிற்கு கீழ் இருப்­ப­தாக புள்ளி விப­ர­வியல் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

ரூபா 4584 பெற்று 40 சத­வீத மாவட்­டங்கள் வறுமைக்கோட்­டிற்கு மேல் உள்­ளன.

15 மாவட்­டங்­களில் அடிப்­படை தேவை­க­ளிற்­காக ஒரு­வ­ருக்கு ஒரு மாதத்­திற்கு அதி­கப்­ப­டி­யான செல­வீ­ன­மாக 4584 ரூபா பதி­வா­கி­யுள்­ள­தாக திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. அதே­வேளை 9 மாவட்­டங்கள் வறுமைக்கோட்­டிற்கு மேலா­கவும் ஒரு மாவட்டம் வறுமைக்கோட்டை ஒட்­டியும் காணப்­ப­டு­கி­றது.

ஆகக்குறைந்த செல­வீ­னத்தில் மார்ச் மாதம் வீழ்ச்சி ஏற்­பட்டபோதும் ஏப்ரல் மாதத்­திலும் மே மாதத்­திலும் அதி­க­ரிப்பு காணப்­பட்­டது.

ஏப்ரல் மாதத்தில் 4 ரூபா அதி­க­ரித்து 4532 ரூபா­வா­கவும் மே மாதத்தில் 52 ரூபா அதி­க­ரித்து 4584 ரூபா­வா­கவும் காணப்­பட்­டது. இரத்­தி­ன­புரி, மொன­ரா­கலை, பதுளை, அநு­ரா­த­புரம், புத்­தளம், குரு­நாகல், திரு­கோ­ண­மலை, கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, வவு­னியா, மன்னார், யாழ்ப்­பாணம், காலி, மாத்­தளை மற்றும் ஹம்­பாந்­தோட்டை ஆகிய மாவட்­டங்­களில் அடிப்­படை தேவை­களை பூர்த்தி செய்ய ஆகக்­கு­றைந்த தொகை­யாக ஒரு­வ­ருக்கு ஒரு மாதத்­திற்கு 4584 ரூபா­விற்கும் குறை­வாக காணப்­பட்­டது. மொன­ரா­கலை தொடர்ச்­சி­யாக ஆகக்­கூ­டிய வறுமை மாவட்­ட­மாக 4316 ரூபா­வாக காணப்­பட்­டது. கொழும்பு மாவட்­டத்தில் அதி­கூ­டிய தொகை­யாக 4976 ரூபா காணப்­பட்­டது. கொழும்பு மாவட்­டத்­திற்கு மேல­தி­க­மாக களுத்­துறை, கம்­பஹா, கண்டி, மாத்­தளை, நுவ­ரெ­லியா, மட்­டக்­க­ளப்பு, பொல­ந­றுவை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்கள் வறுமைக்கோட்டிற்கு மேல் காணப்பட்டன. அம்பாறை மாவட்டம் வறுமைக்கோட்டை ஒட்டி 4528 ரூபாவாக காணப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

.