இலங்கை பெற்­றோ­லியக் கூட்­டுத்­தா­ப­னத்தால் உள்­நாட்டில் பிடுமன் உற்­பத்தி ஆரம்பம்

2019 ஆம் ஆண்­ட­ளவில் சந்தைக் கேள்­வியில் 60 வீதத்தை விநி­யோ­கிக்கத் திட்டம்

நிர்­மா­ணத்­து­றையில் புதிய அத்­தி­யா­யத்தை பதிக்கும் வகையில், இலங்கை பெற்­றோ­லியக் கூட்­டுத்­தா­பனம் தனது சபு­கஸ்­கந்­தையில் அமைந்­துள்ள சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்தில் பிடுமன் உற்­பத்­தியை ஆரம்­பித்­துள்­ளது.

கொழும்பில் அண்­மையில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போது, பெற்­றோ­லிய வளத்­துறை அபி­வி­ருத்தி அமைச்சர் அர்­ஜுன ரண­துங்க இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரி­விக்­கையில், உள்­நாட்டு நிர்­மா­ணத்­து­றையின் துரித வளர்ச்­சியை புரிந்து கொண்டு, பிடு­ம­னுக்கு காணப்­படும் கேள்­வியை நிவர்த்தி செய்யும் வகை­யிலும், இலங்கை பெற்­றோ­லியக் கூட்­டுத்­தா­ப­னத்­தினால் தனது சபு­கஸ்­கந்த சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்தில் பிடுமன் உற்­பத்தி செயன்­மு­றையை ஆரம்­பிக்க தீர்­மா­னித்­துள்­ளது. உள்­நாட்டில் பிடுமன் உற்­பத்­தியை ஆரம்­பித்­துள்­ள­த­னூ­டாக, நாட்டின் நிலை­பே­றான வளர்ச்­சிக்கு பங்­க­ளிப்பு வழங்க நாம் தீர்­மா­னித்­துள்ளோம். இத­னூ­டாக உள்­நாட்டில் தரம் வாய்ந்த மூலப்­பொ­ருட்­களை உற்­பத்தி செய்து கொள்ள முடியும் என்­ப­துடன், வெளிநாட்­டி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­வ­த­னூ­டாக அர­சாங்­கத்­துக்கு ஏற்­படும் செலவை கட்­டுப்­ப­டுத்­தவும் உத­வி­யாக அமையும் என்றார்.

இலா­ப­த்­தன்­மையில் அதி­க­ரிப்பை இலங்கை பெற்­றோ­லி­யக்­ கூட்­டுத்­தா­பனம் எதிர்­பார்ப்­ப­துடன், உள்­நாட்டில் உற்­பத்தி செயற்­பா­டுகள் ஆரம்­பித்­ததும், சுத்­தி­க­ரிப்பில் மேம்­ப­டுத்­தல்­களை மேற்­கொள்­ளவும் எண்­ணி­யுள்­ளது.பிடு­மனை போட்­டி­க­ர­மான விலையில் அறி­முகம் செய்­வதன் மூல­மாக, உள்­நாட்டு நிர்­மா­ணத்­துறை தமது மூலப்­பொ­ருட்­களில் செல­விடும் தொகையை பெரு­ம­ளவில் குறைத்துக் கொள்ள ஏது­வாக அமைந்­தி­ருக்கும். தயா­ரிப்பின் தரத்தில் இலங்கை பெற்­றோ­லியக் கூட்­டுத்­தா­பனம் அதி­க­ளவு கட்­டுப்­பாட்டைக் கொண்­டுள்­ள­துடன், அதன் ஆய்­வு­கூடம் மற்றும் திறமை வாய்ந்த நிபு­ணர்கள் தொடர்ச்­சி­யாக தர­மான உற்­பத்­தி­களை மேற்­கொண்டு, சர்­வ­தேச தரத்­துக்கு நிக­ரான தயா­ரிப்பை வழங்­கு­வார்கள் என எதிர்­பார்க்­கி­றது. மேலும், பிடுமன் உற்­பத்­தி­யூ­­டாக, இலங்கை பெற்­றோ­லியக் கூட்­டுத்­தா­ப­னத்­துக்கு மொத்த டீசல் உற்­பத்­தியை 15 சத­வீ­தத்­தாலும், சூளை எண்ணெய் உற்­பத்­தியை 35– 40 சத­வீ­தத்தால் அதி­க­ரித்துக் கொள்­ளவும் முடியும் என கரு­தப்­ப­டு­கி­றது.

இலங்கை பெற்­றோ­லியக் கூட்­டுத்­தா­பன தலைவர் தம்­மிக ரண­துங்க கருத்துத் தெரி­விக்­கையில், முதற்­கட்ட உற்­பத்­தி­யுடன், நாட்டின் மொத்த பிடுமன் தேவையின் 40 சத­வீ­தத்தை நிவர்த்தி செய்ய நாம் எதிர்­பார்த்­துள்ளோம். தின­சரி 150 மெட்ரிக்தொன் உற்­பத்­தியை மேற்­கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருக்கும். மேலும், சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்தின் பதப்­ப­டுத்தல் திறனில் தொடர்ச்­சி­யான மேம்­ப­டுத்­தல்கள் மூல­மாக பிடுமன் உற்­பத்­தியை நாளொன்­றுக்கு 225 மெட்ரிக்தொன்­னாக அதி­க­ரிக்க நாம் திட்­ட­மிட்­டுள்ளோம். மொத்த விநி­யோ­கத்தை 60 சத­வீ­த­மாக எதிர்­வரும் மாதங்­களில் அதி­க­ரிக்க எண்­ணி­யுள்ளோம். தொடர்ச்­சி­யாக அதி­க­ளவு பிடுமன் உற்­பத்­தி­யுடன், உள்­நாட்டு நிர்­மா­ணத்­து­றையில் எம்மால் தாக்­கத்தை ஏற்­ப­டுத்த முடியும் என்­ப­துடன், உள்­நாட்டில் தயா­ரிக்­கப்­பட்ட பிடு­மனை போட்­டி­க­ர­மான விலையில் சந்­தையில் பெற்றுக் கொடுக்க முடியும். பிடு­மனை அதி­க­ளவு பயன்­ப­டுத்தும் சிறிய மற்றும் நடுத்­த­ர­ளவு வியா­பா­ரங்­க­ளுக்கு தமது நிலையை மேம்­ப­டுத்திக் கொள்­ளவும் இது உத­வி­யாக அமைந்­தி­ருக்கும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.

.