மொபிடல் பங்காளர்கள் THURUவின் மீண்டும் காடாக்கல் டிஜிட்டல் கண்டுபிடிப்பு

கூட்டு ஒருங்கிணைப்புக்களை ஒளிரச் செய்தல் மற்றும் ஒத்துழைப்புக்கான வலுவான ஆற்றல் என்பதை கருத்தில் கொண்டு மொபிடல் THURU(துரு) உடன் இணைந்து செயற்பட ஆர்வம் கொண்டுள்ளது.

மொபிடல் அனுசரனையுடன் சிரச டிவியின் நிகழ்ச்சி முகாமையின் கீழ் கண்டுபிடிப்புக்கள் மற்றும் முயற்சியாண்மைகளை தழுவிய
முதல் திறன் வெளிப்பாட்டு தொலைக்காட்சி நிகழ்சியான கோடியக் வடினா அதாசக் நிகழ்ச்சி சீசன் 2 இன் 10 இறுதி போட்டியாளர்களில் ஒருவர்.

மொபிடல் மற்றும் THURU ஆனது இணை –தயாரிப்புக்கள் மற்றும் இணை-
கண்டுபிடிப்புக்கள் மூலம் THURU வினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு ஒத்துழைப்புடன் பணியாற்றும்.

THURU ஆனது இலங்கையினை 2020 முடிவில் 2 மில்லியன் மரங்களை நடுதல் என்றதோர் இலக்கிற்கு வழிநடாத்தும் ஓர் மீண்டும் காடாக்கல் டிஜிட்டல் திட்டமாகும்.

தொழில்நுட்பம்சார் பங்காளராக் முக்கியமாக NBIOT தளத்திற்கு(Narrow Band Internet
of Things) புளொக்செயின் (Blockchain) இற்கு அத்தோடு வருங்காலத்திற்குரிய அமைப்பினை மற்றும் நுண்ணறிவினை மேற்கொள்வதற்கான செயற்கை நுண்ணறிவிற்கும் மொபிடல் தொழல்நுட்பம்சார் அறிவுரைகளை வழங்கும்.

தேசிய மொபைல் சேவை வழங்குநராக மொபிடல் ஆனது புதிய தொழில்முயற்சிகள் மற்றும் புதுமையாக தொடக்கங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி வெற்றிகரமான வியாபாரமாக மாற்றுவதற்கு வழிநடாத்தும்.

இந்த ஒத்துழைப்பு மூலம் மொபிடல் முழுநாட்டையும் இலக்காக கொண்டு ஓர் மறுசீரமைப்பு முயற்சிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதுடன் விரைவில் எதிர்காலத்தில் விவரங்களை வெளியிடும்.

THURU ஆனது “Facebook for tree” என்ற App இன் ஊடாக மரம் நடுதலிற்கான அடித்தளத்தினை அறிமுகப்படுத்துவதற்கான ஆற்றலை கொண்டுள்ளது.

மக்கள் மரங்களை நட்டு அதனை புகைப்படம் எடுத்து பதிவேற்ற முடியும். App ஆனது தன்னியக்க முறையில் புள்ளிகளை வழங்கும் அதன் மூலம் அந்நபர்
புள்ளிப்பலகையில் இயற்கை ஹீரோவாக மேல்நோக்கிச் செல்ல முடியும்.

App ஆனது தாவரத்தின் வகை மற்றும் மரத்தின் மாதங்கள் வருடங்கள் என்பவற்றை அடிப்படையாக கொண்டு தன்னியக்கமாக ஒட்சிசனை
வெளிப்பாட்டினை கணக்கில் எடுக்கும்.

அந்நபர் மரங்களை நீண்ட நாட்களுக்கு பராமரித்து படங்களை
பதிவேற்றம் செய்யும் போது மேலதிக புள்ளிகளை பெற முடியும்.

உலகளாயவிய ரீதியில் அது மரங்களுக்கான ஓர் வழிகாட்டியாகவும் மற்றும் இயற்கையை நேசிப்பவர்கள் மற்றும் மரங்களை ஆரத்தழுபுபவர்கள் உடன் இவ் பாவனையாளர் லிங்க் இணைப்பினை ஏற்படுத்தும்.

THURUவும் மீண்டும் காடாக்கல் மற்றும் நடுதல் செயற்திட்டங்களை நாடு பூராகவும் செற்படுத்தும். சுவாரஸ்யமாக, ஓர் மிகப்பெரிய இடப்பரப்பில் குறுகிய காலப்பகுதியில் கடினமான நிலப்பரப்பில் வெற்றிகரமாக மீண்டும் காடாக்கலிற்கு
ஆண் தேனீக்களை பாவித்தல் போன்றவற்றிற்கு தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துகின்றன.

மொபிடல் அதன் வாசகமான “என்றும் உங்களுடனேயே” என்ற பதத்தின் கீழ் சூழல் மற்றும் சமூக பொறுப்புக்களுக்கான முயற்சிகளிற்கு கவனஞ் செலுத்துவதோடு இந்த இணைப்பானது தொழில்நுட்பம் மற்றும் பசுமையாக்கல் என்ற இரண்டினையும் சரி சமனாக்கும் அதேவேளை இலங்கையின் எதிர்கால
சந்ததியினருக்காக பரந்த சமூகத்தினை மீண்டும் காடாக்கல் தொடர்பான ஓர் அறிவினை கொண்டுவருதல் ஆகும்.

மொபிடல் ஆனது தொடர்ச்சியாக தொழில்நுட்பம்சார் தொழில்முனைவுகளுக்கு தனது ஆதரவினையும் ஊக்குவிப்பையும் நலகுவதோடு பல முயற்சிகள் ஊடாக கண்டுபிடிப்பாளர்களுக்கு ஊக்கம் அளிக்கின்றது.

Leave A Reply

Your email address will not be published.

.