ஒன்லைன் கஜு விற்பனை நிலையம் திறப்பு

இலங்கையின் முன்னணி கஜு பதப்படுத்தல் நிறுவனமான ரோயல் ஃபுட் மார்க்கட்டிங் கம்பனி, இலங்கையின் முதலாவது ஒன்லைன் கஜு விற்பனை நிலையத்தை ஆரம்பித்துள்ளது.


இந்த ‘Royal Cashews Online Cashew Store’ நிலையம் நுகேகொட பகுதியில் அமைந்துள்ளது. ரோயல் ஃபுட் மார்க்கட்டிங் கம்பனியின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி. ருவன் வதுகல இந்த நிலையத்தை வைபவரீதியாக திறந்து வைத்தார்.
இந்த ஒன்லைன் தளத்தினூடாக வாடிக்கையாளர்கள் தற்போது கஜு ஓடர்களை மேற்கொள்ள முடியும். இதற்காக Royal Cashews App ஐ Google Play அல்லது App Store இனூடாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது www.royalcashew.lk எனும் இணையத்தளத்தினூடாக மேற்கொள்ளலாம்.

ஒரு கிலோகிராமுக்கு அதிகமான கஜுவை ஒன்லைனில் ஓடர் செய்ய முடியும். கொடுப்பனவுகளை ஒன்லைனில் VISA, MASTER அல்லது AMEX கடன் அட்டைகளினூடாக மேற்கொள்ளலாம் அல்லது பொருட்களை விநியோகிக்கும் போது மேற்கொள்ளவும் முடியும்.

நாட்டின் எந்தவொரு பகுதிக்கும் பொருட்களை இலவசமாக ரோயல் ஃபுட் மார்க்கட்டிங் கம்பனி விநியோகிக்கும். ஒன்லைன் நிலையம் அறிமுகத்துடன், ஐந்து கஜு தயாரிப்புகளான ‘Dehydrated Full Nut’, ‘Dehydrated Cashew splits’, ‘Dehydrated cashew pieces’, ‘Hot and Spicy cashews’மற்றும் ‘Salted Cashews’ ஆகியவற்றை தற்போது ஒன்லைனில் கொள்வனவு செய்து கொள்ளலாம். உத்தரவாதத்துடனான குறைந்த விலையில் இவற்றை கொள்வனவு செய்ய முடியும்.


ரோயல் ஃபுட் மார்க்கட்டிங் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி. ருவன் வதுகல கருத்துத் தெரிவிக்கையில்,

“கஜு தயாரிப்புகளை சர்வதேச நியமங்களுக்கமைய உற்பத்தி செய்யும் நிறுவனமாக ரோயல் ஃபுட் மார்க்கட்டிங் திகழ்கிறது.
வாடிக்கையாளர்கள் தமது வேலைப்பளு நிறைந்த சூழலில், தமக்கு அவசியமான பொருட்களை ஒன்லைனில் ஓடர் செய்து கொள்வதில் அக்கறை காண்பிக்கின்றனர். உயர் தரம் மற்றும் நாவூறும் சுவை போன்றன ஒன்லைனில் விற்பனை செய்யப்படும் கஜு தயாரிப்புகள் கொண்டிருக்க வேண்டும்.
எமது தயாரிப்புகளின் மீது வாடிக்கையாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். நாடு முழுவதிலும் பரந்து காணப்படும் எமது வாடிக்கையாளர்களை சென்றடையும் நோக்கில் நாம் ஒன்லைனில் எமது விற்பனை செயற்பாடுகளை ஆரம்பிக்க தீர்மானித்தோம்” என்றார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

“1999 இல் எமது நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது. குறுகிய காலப்பகுதியில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தனக்கென தனிநாமத்தை பதிவு செய்துள்ளது. எமது தயாரிப்புகளின் மீது வாடிக்கையாளர்கள் காண்பித்த நம்பிக்கை இதற்கு ஏதுவாக அமைந்திருந்தது. Royal Cashews நாமம் புகழ் பெற்ற ஏற்றுமதி தயாரிப்பாக அமைந்துள்ளது. கஜு தயாரிப்புகளை விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு இனிய அனுபவத்தை வழங்குகிறது. இலங்கையின் நுகர்வோருக்கு சுவை நிறைந்த வெளிநாட்டு உணவுகளை வழங்க நாம் முன்வந்துள்ளோம்” என்றார்.


இந்த தயாரிப்புகள் அனைத்தும் தற்போது கிரெஸ்கட் (கொழும்பு 3), உலக வர்த்தக மையம், லிபர்டி பிளாஸா, ஒடெல், ஆர்கேட் இன்டிபென்டன்ஸ் ஸ்குயார், கே-சோன் (ஜா-எல மற்றம் மொரட்டுவ), கண்டி அப்டவுன், ரோயல் மோல- கண்டி, தெற்கு அதிவேக நெடுஞ்சாலை (வெலிப்பன நிறுத்துமிடம்), நீர்கொழும்பு, கிரிபத்கொட, நுகேகொட, காலி, கம்பஹா மற்றும் பொரளை ஆகிய பகுதிகளில் கிடைக்கும்.
1999 இல் தனது செயற்பாடுகளை ஆரம்பித்;திருந்த ரோயல் ஃபுட் மார்க்கெட்டிங் கம்பனி, ISO 22000, HACCP மற்றும் தர சான்றுகளை கொண்டுள்ளது. இலங்கையில் காணப்படும் முன்னணி கஜு பதப்படுத்தல் நிறுவனம் என்பதுடன், ISO 22000 தரச்சான்றையும் பெற்றுள்ளது.

Royal Cashews தயாரிப்புகள் பரந்தளவு நாவூறும் சுவைகளில் காணப்படுகின்றன. 19 சுவைகளில், 682 வகை கொள்கலன்களில் சந்தைப்படுத்தப்படுவதுடன், இதில் 101 கொள்கலன்கள் அன்பளிப்பு செய்ய உகந்த வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் ஆய்வு மற்றும் அபிவிருத்தி பிரிவு என்பது, நிறுவனத்துக்கு பிரத்தியேகமான கஜுக்களை வடிவமைத்துள்ளது, இது நிறுவனத்துக்கு விசேடமானதாக அமைந்துள்ளது. இந்த சுவைகளில் Cheese and Onion, Sugar coated, Chilli Garlic, Hot Pepper, BBQ, Chilli Seasoning, Spanish Tomato, Salt Extra Fine, Shrimp & Red Onionமற்றும் Sour Cream & Onion போன்றன அடங்கியுள்ளன.

இந்த தெரிவுகளுக்கு மேலதிகமாகரூபவ் இலங்கைக்கு பிரத்தியேகமான கஜு கறியும் பேணியில் அடைக்கப்பட்டு ‘Royal Cashew Nut Curry’ எனும் நாமத்தில் வெளிநாட்டு சந்தைகளில் அதிகளவு கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் கஜு உற்பத்தி மற்றும் பதப்படுத்தல் பகுதிகளிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட சிறந்த கஜு வகைகளை கொண்டு தனது தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது.

Royal Cashews தயாரிப்புகள் மலேசியா, ஜப்பான், அமெரிக்கா, ஐக்கிய இராஜ்ஜியம், நியுசிலாந்து ஜேர்மனி, அவுஸ்திரேலியா, அவுஸ்திரியா, மாலைதீவுகள் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
Royal Cashews வர்த்தக நாமம் என்பது பல விருதுகளையும் சுவீகரித்துள்ளது. Pro Food 2009 மற்றும் 2011 ஆகிய விருதுகளை சூழலுக்கு பாதுகாப்பான பொதியிடலுக்காக வென்றிருந்தது. மேலும் MACO business excellence விருது, Lanka Star President’s தங்க விருது மற்றும் ASIASTAR 2015 விருது ஆகியவற்றை சூழலுக்கு பாதுகாப்பான பொதியிடலுக்காக வென்றுள்ளது.

ரோயல் ஃபுட் மார்க்கட்டிங் கம்பனி இரு துணை நிறுவனங்களை கொண்டுள்ளது: கிறீன்வே ஏசியா லங்கா மற்றும் ட்ரஸ்ட் லங்கா சப்ளையர்ஸ் ஆகியன அவையாகும்.

 

Leave A Reply

Your email address will not be published.

.