‘கொட்டகல கஹட்ட ரச வாசனா’ வழங்கும் 20 TVS ஸ்கூட்டி பெப்கள்

இலங்கையின் மிகவும் விரும்பத்தக்க தேயிலை வகைகளில் ஒன்றான கொட்டகல கஹட்ட,அதன் வாடிக்கையாளர் ஊக்குவிப்புத் திட்டமான ‘கொட்டகல கஹட்ட ரச வாசனா’ திட்டத்தை மீண்டும் அறிவித்துள்ளது.

இதன் மூலம் வெற்றியாளர்களுக்கு 20 TVS ஸ்கூட்டி பெப்களைப்
பெற்றுக் கொடுக்கிறது. இந்த ஊக்குவிப்புத் திட்டமானது, 2018 ஜுன் 07 முதல் 2018 ஓகஸ்ட் 10 ஆம் திகதி வரை இடம்பெறும்.

வாடிக்கையாளர்கள், தங்களது பெயர், முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம்
என்பனவற்றுடன், கொட்டகல கஹட்ட தேயிலையின் மேலுறைகளையும் இணைத்து, ‘கொட்டகல கஹட்ட வாசனா’, த.பெ. இல. 161, கொழும்பு என்ற முகவரிக்கு அனுப்பி வைத்து போட்டியில் கலந்து கொள்ள முடியும்.

மேலும், குறித்த காலப்பகுதியில், கொட்டகல கஹட்ட ஊக்குவிப்பு அதிகாரிகள், நாட்டின் 20 மாவட்டங்களில் 110 நகரங்களைச் சென்றடைவார்கள்.

வாடிக்கையாளர்கள் தங்களது விண்ணப்பங்களை இந்த வாகனங்களில்
வருவோரிடமும் கையளிக்க முடியும்.

இது அவர்களின் பங்களிப்பை அதிகரிக்க மேலும் இலகுவான வழிமுறையாகும்.

இந்த விடயம் பற்றிக் கருத்து வெளியிட்ட C.W மெக்கி பிஎல்சியின் உதவிப் பொது
முகாமையாளர் – சந்தைப்படுத்தல் திரு. துமிந்த கொத்தலாவல, ‘கடந்த வருடம் ‘கொட்டகல கஹட்ட ரச வாசனா’ ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் நாம் அடைந்து கொண்ட வெற்றியை அடுத்து, இவ்வருடமும் இந்த ஊக்குவிப்புத் திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க நாம்  தீர்மானித்துள்ளோம்.

கடந்த வருட வெற்றியாளர்களினாலும் ஸ்கூட்டி பெப்கள் வெல்லப்பட்டன.இதுவரை கணிசமான அளவு கூப்பன்கள் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

வாடிக்கையாளர்களிடையே எமது வர்த்தகப் பெயருக்குக் காணப்படும் வரவேற்பை இது விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருக்கிறது” என்று கூறினார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,’இந்த ஊக்குவிப்புத் திட்டமானது, எமது நீண்டகால வாடிக்கையாளர்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு முறையாகவே ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக எமது உற்பத்திகளை பயன்படுத்தி வருகின்றமைக்கு நாம் காட்டும் நன்றிக் கடனாகும். இதற்குக் கிடைத்துள்ள வரவேற்பின் மூலம் உயர்மட்ட உற்பத்திகளை நாம் சந்தைக்கு பெற்றுக் கொடுக்கிறோம் என்பதை சான்று பகரும் வகையில் காணப்படுகின்றது” என்று தெரிவித்தார்.

2012 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட கொட்டகல கஹட்ட, துரித வளர்ச்சியின் மூலம் தற்போது சந்தையில் மூன்றாமிடத்தில் காணப்படுகின்றது. இலங்கை தேயிலையின் அதியுயர்ந்த தரம் மற்றும் குணாதிசயங்களை சிறந்த முறையில் இது பெற்றுத் தருகிறது.

C.W.மெக்கி பிஎல்சி நிறுவன, FMCG பிரிவின், ஸ்கான் உற்பத்திகளில் ஓர் உயர்மட்ட
தயாரிப்பாக ‘ கொட்டகல கஹட்ட’ விளங்கி வருகிறது. இது, உயர்தர தேயிலையின்
சுவையையும், நறுமணத்தையும் பெற்றுத் தருகிறது.

C.W.மெக்கி பிஎல்சி யின் ஸ்கான் உற்பத்திகள் பிரிவானது, இலங்கையில் பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வர்த்தகக் குழுமம் ஒன்றாகும். உற்பத்தி, இறக்குமதி, விநியோகம் ஆகிய பிரிவுகளில் FMCG பொருட்களை சந்தைக்குப் பெற்றுக் கொடுக்கிறது.

சன்குயிக் பழச்சாறு வகைகள், ஸ்கான் தண்ணீர் போத்தல்கள், ஸ்கான் ஜம்போ பீனட்ஸ்,ஓஷன் பிரஷ் டூனா, டெலிஷ் பேக்கரி உற்பத்திகள், பொரஸ்ட் பாம் டின்களில் அடைக்கப்பட்ட மரக்கறி வகைகள், என்-ஜோய் சமையல் எண்ணெய் ஆகியன நிறுவனத்தின் பிரசித்திபெற்ற உற்பத்திகளில் சிலவாகும்.

இவற்றில் அனேகமானவை சந்தையில் முதலிடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். C.W.மெக்கி நிறுவனத்தின் ஸ்கான் உற்பத்திகளானவை, பல்வேறு வர்த்தகப் பெயர்களையும், பல்வேறு வழிமுறைகளையும் கொண்ட ஒரு நிறுவனமாகும்.

இது, தனது வர்த்தகப் பெயர்களில் சந்தையில் சகல மட்டங்களிலும் வலுவான
நிலையில் இருக்கும் ஒரு நிறுவனமாகும்.

Leave A Reply

Your email address will not be published.

.