புதிய முகாமைத்துவ நியமனங்களுடன் பெல்வத்த டெய்ரி தனது செயற்பாடுகளை வலுப்படுத்தல்

இலங்கையின் 100% உள்ளுர் பால் உற்பத்தியாளரான பெல்வத்த டெய்ரி இன்டஸ்ரீஸ் லிமிடடானது(PDIL) புத்தள பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்டேட்-ஒப்-த-ஆர்ட் உற்பத்தி ஆலைக்கு புதிய நிர்வாக இயக்குனர் மற்றும் செயற்பாட்டு இயக்குனர் அவர்களை நியமித்ததன் மூலம் தனது செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

அக்மல் விக்ரமநாயக்க அவர்கள் பெல்வத்த டெய்ரி இன்டஸ்ரீஸினது நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டு அவரது தந்தையான ஆரியசீல விக்ரமநாயக்க அவர்களினால் உருவாக்கப்பட்ட நிறுவனத்தினது முகாமைத்துவ பொறுப்புக்களை ஏற்றார்.

இவரது வழிகாட்டலின் கீழ் பெல்வத்த டெய்ரியானது சிறந்த ஒழுங்கு நடவடிக்கைகளிற்காக பெருநிறுவன மறுகட்டமைப்பை மேற்கொண்டதுடன் மிகவும் போட்டிகரமான சந்தையிலே தனது பிராண்டை மீள்ஸ்தானப்படுத்தியுள்ளது.

“நாங்கள் மிகவும் மாறுமியல்புடைய சந்தையிலே போட்டியிடுவதுடன் இலங்கையை
பாலுற்பத்தியில் தன்னிறைவாக்குவதே எனது தந்தையின் தரிசனமாக காணப்பட்டது.

இது ஒரு நிறைவேற்றக்கூடிய கனவாகும் என நாங்கள் ஒரு நிறுவனமாக மிக உறுதியாக நம்புவதுடன் நுகர்வோரிற்கு 100% இலங்கை தயாரிப்பை நியோகிக்கும் அதேவேளையில் எங்களுடைய பாற்பண்ணையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கையை சிறப்படையச்செய்வதற்கு தொடர்ச்சியாக முயற்சி செய்கின்றோம்.” என்று அக்மல் விக்ரமநாயக்க அவர்கள் குறிப்பிட்டார்.

இவரது கண்காணிப்பின் கீழ், பெல்வத்த டெய்ரி இன்டஸ்ரீஸ் லிமிடடானது சிரேஷ்ட முகாமைத்துவ பதவிகளிற்கு திறமையான நபர்களை இணைத்துக் கொண்டுள்ளதுடன் அவர்களது பெருநிறுவன காரியாலயம் மற்றும் உற்பத்தி ஆலையில் சிறந்த நடைமுறை கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அத்தகைய பொருத்தமான பணியாளர் சேர்ப்பில் ஒன்றாக டொஷான் விக்ரமநாயக்க அவர்கள் புத்தள உற்பத்தி ஆலையில் செயற்பாட்டு இயக்குனராக பதவியேற்றமையாகும்.

டொஷான் அவர்கள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பட்டதாரியாக காணப்படுவதுடன் தன்னுடன் புத்தம் புதிய முன்னோக்குகளை அவர் நிறுவனத்திற்கு எடுத்து வருகின்றார்.

மற்றைய பல சிரேஷ்ட முகாமைத்துவ நிர்வாகிகளுடன் மேம்படுத்தப்பட்ட உற்பத்தி திறனிற்கான மூலப்பாலைப் பெற்றுக்கொள்தல் மற்றும் விநியோகித்தலை கட்டுப்படுத்தும்பொருட்டும் தனது கொள்முதல் வலையமைப்பை விரிவாக்க தனது முக்கிய கவனத்தை செலுத்தி வருகின்றது.

இந்த விரிவாக்கத்தின் போது இலங்கையில் தரமான பால் விநியோகத்தை மேம்படுத்தும்பொருட்டு பால் உற்பத்தி சமுதாயங்களினது அபிவிருத்தியில்
முக்கிய கவனம் செலுத்தப்படுகின்றது.

பெல்வத்த டெய்ரி இன்டஸ்ரீஸ் லிமிடடானது தனது தனிப்பட்ட மில்லில்
தயாரிக்கும் கால்நடை தீவனம் மற்றும் PDILஇன் சொந்த புற்தரைகளில் வளர்க்கப்பட்ட போஷாக்கான புற்களின் மூலமாக கடந்த ஆண்டில் பாலுற்பத்தியில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும்,இந்த பாலுற்பத்தி மையங்களில் ஊழியர்கள் மாடுவளர்ப்பில் கையாளப்படுகின்ற நல்ல பழக்கவழக்கங்கள்,பாலுற்பத்தி மற்றும் தரத்தை அதிகரிக்க எவ்வாறு கால்நடை போஷாக்கினை மேம்படுத்துவது, கொட்டகைப்பராமரிப்பு மற்றும் எனைய பிற பல கருத்ததாக்கங்கள் போன்றவற்றில் பாற்பண்ணையாளர்களை
பயிற்றுவிக்கின்றனர்.

டொஷான் அவர்களின் வழிகாட்டலின் கீழ் புத்தள உற்பத்தி ஆலையில் ஊழியர்கள், செயன்முறைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் பல மாற்றங்களை ஏற்பட்டுள்ளன.
அவர் தனது குறிப்பிடத்தக்க கவனத்தை தற்போதுள்ள தயாரிப்புக்களின் மேம்பாடு மற்றும் புதிய தயாரிப்புக்களின் மேம்படுத்தல் போன்றவற்றில் செலுத்துகின்றார். இந்த முயற்சியின் காரணமாக பட்டர், பால் பவுடர் மற்றும் ஐஸ் கிரிம் என்பன நுகர்வோரிற்கான சிறந்த தயாரிப்புக்களாக மாறும்படிக்கு தயாரிப்பு
மேம்படுத்தலிற்குட்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் 2018 ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ள யோகட்
பானம் உள்ளடங்கலாக பல புதிய தயாரிப்புக்களின் மேம்படுத்தலை அவர் மேற்கொண்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக, புதிய சுவையூட்டப்பட்ட பால் தயாரிப்புக்கள் மற்றும் புத்தம்புதிய பால் தயாரிப்புக்கள் என்பனவற்றை வெளியிட அவர் திட்டமிட்டுள்ளார்.

மேலதிக தகவல்களிற்கு 0112 452094 எனும் தொலைபேசி இலக்கத்திலோ அல்லது
[email protected] எனும் மின்னஞ்சல் முகவரியிலோ பெல்வத்த டெய்ரியை தொடர்பு கொள்க அல்லது www.pelwattedairy.com எனும் அவர்களது இணையத்தளத்தினுள் பிரவேசிக்குக.

 

Leave A Reply

Your email address will not be published.

.