DSI இன் தனது புதிய காட்சியறை குருநாகலில்

இல.138, கொழும்பு வீதி குருநாகல் என்பது, எமது மிகப்புதிய DSI காட்சியறையின் முகவரியாகும். இந்தக்காட்சியறையானது, ஜுன் மாதம் 14 ஆம் திகதி வெகு விமரிசையாக திறந்து வைக்கப்பட்டது.

குருநாகல் நகரில் அமைந்திருக்கும் நான்காவது காட்சியறையாக இது திகழ்கிறது. DSI இன் சகல வகையான உற்பத்திகள் மற்றும் விநியோகங்களை இங்கு வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்தக் காட்சியறையானது, D செம்சன் அன்ட் சன்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் தலைவர் திரு. நந்ததாச ராஜபக்ஷ அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

D செம்சன் அன்ட் சன்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திரு. துசித ராஜபக்ஷ, D செம்சன் அன்ட் சன்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி கௌஷல்ய பெரேரா ஆகியோர் இந்த நிகழ்வின் போது கலந்து கொண்டனர்.

நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவமும் இதில் பங்கேற்றது. இந்த நிகழ்வின் போது, DSI சுப்பர்ஸ்போட் ‘சுப்பர் தேக்கி வாரய” போட்டியின் குருநாகல் மாவட்ட வெற்றியாளர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

குருநாகலில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய காட்சிறையானது, பெண்கள், ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்குத் தேவையான அனைத்து விதமான வைபவங்களுக்கும் ஏற்ற பாதணிகள் மற்றும் நாகரிக ஆடையணிகள் என்பனவற்றைக் கொண்டுள்ளது.

இந்த காட்சியறையில் பல்வேறு வகையான சர்வதேச வர்த்தகப் பெயர்களைக் கொண்ட பொருட்களும்,உள்நாட்டு வர்த்தகப் பெயர் கொண்ட பொருட்களும் காணப்படுகின்றன.

நாட்டின் மிகப்பெரிய சில்லறை விற்பனை வலையமைப்புக்களில் ஒன்றான D செம்சன் அன்ட் சன்ஸ் பிரைவேட் லிமிட்டெட், பல்வேறு பாதணிகளின் வர்த்தகப் பெயர்களுக்கு ஏக முகவராகத் திகழ்ந்து வருகின்றது.

DSI,ரண்பா,செம்சன்,சுப்பர்ஸ்போட்,பீட்,பீச்,பெற்றல்ஸ்,பன்-சவுல்ஸ்,டமிக்,வேவ்ஸ், ஜெஸிக்கா மற்றும் AVI என்பன அவற்றுள் சிலவாகும். பிரசித்தி பெற்ற சர்வதேச வர்த்தகப் பெயர்களான கிளார்க்ஸ்,ரெட்டேப்,புளோஷிம்,றீபொக்,பூமா,பிலா,யூஎஸ் போலோ, அரோவ், டப்ளியூ மற்றும் அவுரெலியா போன்ற உற்பத்திகளும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

DSI 200 க்கும் அதிகமான கிளை வலையமைப்பைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம், நாடு தழுவிய ரீதியில் 4,000 விநியோகத்தர்களையும், 50க்கும் மேற்பட்ட விற்பனை முகவர்களையும் கொண்டு செயற்பட்டு வருகிறது. நிறுவனத்தின் தொலைநோக்கான வாடிக்கையாளரை நோக்கிய வர்த்தகம் ஒன்றை உருவாக்கும் நோக்குடன் இவர்கள் அனைவரும் முழுமையாக செயற்பட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

.