உலக ஸ்மார்ட்போன் சந்தையில் 2 ஆவது இடத்தை கைப்பற்றியுள்ள Huawei – IDC அறிவிப்பு

உலகில் மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநாமங்களுள் ஒன்றான Huawei,2018 ஆம் ஆண்டின் 2 ஆவது காலாண்டில் 15.8 என்ற மொத்தப் பங்குடன் சர்வதேச ஸ்மாரட்போன் சந்தையில் இரண்டாவது ஸ்தானத்தை தற்போது கைப்பற்றியுள்ளதாக IDC அறிவித்துள்ளது.


International Data Corporation (IDC) இன் உலகளாவிய காலாண்டு மொபைல் தொலைபேசி கண்காணிப்பு ஆய்வின் முதற்கட்ட தரவுகளின் பிரகாரம் Huawei தற்போது இரண்டாவது ஸ்தானத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

இக்காலாண்டில் 54.2 மில்லியன் தொலைபேசிகளை Huawei ஏற்றுமதி செய்துள்ளதுடன்,சந்தையில் இது 15.8 சதவீதமாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டில் இது 11 சதவீதமாக காணப்பட்டதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் மிகவும் விரும்பி நாடப்படுகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமாக Huawei வளர்ச்சி கண்டுள்ளதுடன்,இலங்கையில் வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் தமது சாதனங்கள் மூலமாக தொடர்ந்தும் பல்வேறு முதன்முதலான அம்சங்களையும்,புத்தாக்கமான தொழில்நுட்பத்தையும் அறிமுகம் செய்து வருகின்றது.

ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மீது பாரிய அளவில் முதலீடுகளை மேற்கொள்கின்ற ஒரு புத்தாக்கமான ஸ்மார்ட்போன் வர்த்தகநாமம் என Huawei போற்றப்படுவதுடன் ஆண்டுதோறும் தனது வருமானத்தில் 10% இற்கும் மேற்பட்ட தொகையை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மீது முதலிட்டு வருகின்றது.
Huawei இன் 2017 இற்கான ஆண்டறிக்கையின் பிரகாரம், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பணிகளில் 80,000 வரையான பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், இது மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 45% எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஆணைக்குழு வெளியிட்டுள்ள 2017EU Industrial R&D Investment Scoreboard அறிக்கையின் பிரகாரம் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பான முதலீடுகளைக் கருத்தில் கொள்கையில் 2017 ஆம் ஆண்டில் சர்வதேச தொழில்நுட்ப பெரு நிறுவனங்கள் மத்தியில் 6 ஆவது ஸ்தானத்தில் Huawei தரப்படுத்தப்பட்டுள்ளது.

“ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மீது கவனம் செலுத்தியுள்ள ஒரு நிறுவனம் என்ற வகையில் பாவனையாளர்களின் தேவைகள் சார்ந்த புத்தாக்கமான தொழில்நுட்ப அம்சங்களை நாம் தோற்றுவிப்பதுடன், மென்பொருள் மற்றும் வன்பொருள் கூட்டிணைப்புடன் வாடிக்கையாளர்களுக்கு பெறுமதியை தோற்றுவித்து வருகின்றோம்.

எமது வாடிக்கையாளர்களின் கருத்துக்களை செவிமடுத்து, சிறப்பான அனுபவங்களை வழங்குவதற்கான புத்தாக்கங்களை அறிமுகப்படுத்தி, மேம்படுத்தும் முகமாக நாம் தொடர்ந்தும் பன்முக வழிமுறை தடங்களை கட்டியெழுப்பி வருகின்றோம்,”என்று Huawei Device SriLanka நிறுவனத்தின் இலங்கைக்கான தலைமை அதிகாரியான பீட்டர் லியு அவர்கள் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

“Huawei இனைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமான ஒரு சந்தையாக இலங்கை காணப்படுவதுடன், மேலும் வளர்ச்சி கண்டு, மிகச் சிறந்த உற்பத்திகளை கிடைக்கச் செய்து, தொடர்பாடலை அதிகரித்து உச்ச ஸ்தானத்தை எட்டி இலங்கை வாடிக்கையாளர்களுக்கு எமது மிகச் சிறந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துவதை நாம் தொடர்ந்தும்முன்னெடுப்போம்,” என்று குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.

.