கவுன்டர் பொயின்ட்டினால் முன்னணி தலைசிறந்த ஸ்மார்ட்ஃபோன்களாக OPPO தெரிவு

உயர் நிலை சிறந்த பிரிவில் முன்னணி ஸ்மார்ட்ஃபோன் வர்த்தக நாமமாக OPPO தெரிவு செய்யப்பட்டுள்ளது.


கவுன்டர்பொயின்ட் எனும் சந்தை ஆய்வுகளை முன்னெடுக்கும் நிறுவனத்தினால் மேற்கொண்ட ஆய்விலிருந்து இந்த தெரிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகளவு பரந்த சந்தையில், கடுமையான போட்டிக்கு மத்தியில் இந்த வர்த்தக நாமம் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளமையை இந்த தரப்படுத்தல் வெளிப்படுத்துகிறது.


மேலும், 95% ஆன விற்பனைகள் உள்ளக சீன சந்தையிலிருந்து பதிவாகும் நிலையில், OPPO தனது பங்கை மேம்படுத்திக் கொள்வதற்கு அதிகளவு வாய்ப்புகள் காணப்படுகின்றதுடன்,உலகளாவிய ரீதியில் காணப்படும் இளம் நுகர்வோருக்கு அழகிய ஸ்மார்ட்ஃபோன் தெரிவுகளை பெற்றுக் கொடுக்க முன்வந்துள்ளமை இதனூடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயர் நிலை ஸ்மார்ட்ஃபோன் சந்தை விலை மட்டம் மற்றும் OEM பங்கு (ஆதாரம் : கவுன்டர்பொயின்ட்) OPPO லங்கா பிரதம நிறைவேற்று அதிகாரி பொப் லி கருத்துத் தெரிவிக்கையில்,

“தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்தி, அனைவருக்கும் அருகில் கொண்டுவந்து, நுகர்வோரின் தேவைகளை நிவர்த்தி செய்வதில் நாம் கவனம் செலுத்தி வரும் நிலையில்,உயர் மட்ட ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் நாம் சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்துள்ளமையை கவுன்டர்பொயின்ட் அறிக்கை உறுதி செய்துள்ளதனூடாக பெரும் மகிழ்ச்சி கொள்கிறோம்” என்றார்.

சர்வதேச மட்டத்தில் உயர் நிலை ஸ்மார்ட்ஃபோன் சந்தை 2018 இன் இரண்டாம் காலாண்டில் 7% ஆல் அதிகரித்திருந்ததாக கவுன்டர்பொயின்ட் அறிக்கை தெரிவித்திருந்தது.$400-600 விலைக்குட்பட்ட உயர் நிலை ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் 10% ஐ OPPO தன்வசம் கொண்டுள்ளதுடன் சந்தைப் பங்கை பொறுத்தமட்டில் 22மூ உடன் முதலிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

Apple, Samsung, Huawei,Xiaomi மற்றும் ஏனையவை இதனைத் தொடர்ந்து காணப்படுகின்றன. அதிகளவு முக்கியத்துவம் வாய்ந்த சீன உயர் நிலை ஸ்மார்ட்ஃபோன் சந்தையில்உலகின் மாபெரும் Apple முதலிடத்திலும் OPPO இரண்டாமிடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன.

சீன ஸ்மார்ட்ஃபோன் உற்பத்தியாளர்கள் தமது முன்னணி தயாரிப்புகளை இந்த ஆண்டில் மெருகேற்றம் செய்துள்ளதுடன்ரூபவ் இதில் OPPO முன்னிலையில் காணப்படுகிறது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருந்த Find X நுகர்வோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன், நிறுவனத்தின் சு தெரிவுகள் மற்றும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருந்த VOOC flash charging வசதியுடனான OPPO F9 க்கும் சந்தையில் பெரும் வரவேற்பு காணப்படுகிறது.

2018 இல் OPPO இனால் சில புத்தாக்கமான தொழில்நுட்பங்கள் அதன் கையடக்க தொலைபேசிகளில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன.

இதில் VOOC flash charging அடங்கியுள்ளது. இதனூடாக ஐந்து நிமிடங்கள் வரை கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்து, 2 மணித்தியாலங்கள் வரை உரையாட முடியும். மேலும் panoramic arc screen, AI-enhanced 3D Camera, TOF and 3D structured light technology போன்றனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

AI தொடர்பான ஸ்டான்ஃபேர்ட் பல்கலைக்கழகத்துடன் பங்காண்மை உடன்படிக்கையை OPPO கைச்சாத்திட்டுள்ளதுடன்,எதிர்காலத்தில் 5 G ஸ்மார்ட்ஃபோன்கள் வடிவமைப்புக்காக வெற்றிகரமாக 5 G பரிசோதித்திருந்தது. அண்மைக் காலங்களில், இனால் தனது R&D மற்றும் அலங்கார வடிவமைப்பு நிலையங்களில் பெருமளவு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு,தனது உற்பத்திகளின் வன்பொருள்களின் திறன்களை மேம்படுத்துவது தொடர்பில் பெருமளவு கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

மென்பொருளை பொருத்தமட்டில்,நிறுவனத்தின் ColorOS இனால் பாவனையாளர்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பு கிடைத்துள்ளது. இவற்றுக்கு நிறுவனம் காப்புரிமையை பெற்றுள்ளதுடன், சர்வதேச ரீதியில் 32000க்கும் அதிகமானோரை சென்றடைந்துள்ளது.

இதுவரையில்,30 க்கும் அதிகமான நாடுகளில் பிரவேசித்துள்ளதுடன், 400,000க்கும் அதிகமான விற்பனை நிலையங்களில் இயங்கி வருகிறது. சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனையை பொறுத்தமட்டில் OPPO தொடர்ச்சியாக தனது இளம் நுகர்வோரை இலக்காகக் கொண்டு புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது.

இதற்காக விளையாட்டு, நவநாகரிகம், திரைப்படங்கள்,கேமிங் மற்றும் இதர பிரிவுகளில் பங்காண்மைகளை மேம்படுத்தி வருகிறது. OPPO ஏற்கனவே Barcelona,இந்திய தேசிய கிரிக்கெட் அணி, Victoria’s Secret Fashion Show மற்றும் America’s Next Top Model போன்றவற்றுடன் பங்காண்மைகளை ஏற்படுத்தியுள்ளது.
இவை ஒவ்வொன்றிலும்,இளம் பாவனையாளர்கள் வெற்றிகரமாக சென்றடைந்து,அவர்களின் வாழ்க்கைக்கு கையடக்க தொலைபேசி எவ்வாறு பங்களிப்பை வழங்கும் என்பதை உணர்த்தியுள்ளது.

பெருமளவான மக்களை சென்றடைவதற்கு இது வெற்றிகரமான மூலோபாயமாக அமைந்துள்ளது. OPPO இன் அடிப்படை இலக்குகளில் ஒன்றாக,நவீன தொழில்நுட்பத்தை பின்பற்றி, பாவனையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வது என்பது அமைந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

.