முன்மாதிரியாக திகழும் மட்டு. பிரண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலை

முன்­னணி ஆடை உற்­பத்தி நிறு­வ­ன­மான Brandix அதன் மட்­டக்­க­ளப்பு ஆடைத் தொழிற்­சா­லையை சூழ­லுக்கு இசை­வான தொழிற்­சா­லை­யாக சிறந்த முறையில் கட்­ட­மைத்து ஏனைய உற்­பத்தி நிறு­வ­னங்­க­ளுக்கு முன்­மா­தி­ரி­யாக தமது உற்­பத்தி செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கி­றது.

தேசிய மற்றும் சர்­வ­தேச ரீதியில் காணப்­படும் சிறந்த நிலைபேராண்மை அபி­வி­ருத்தி செயற்­பா­டு­களை பின்­பற்­று­வதில் தொடர்ச்­சி­யாக முன்­னணி வகிக்கும் இந்­நி­று­வ­னத்தின் மட்­டக்­க­ளப்பு ஆடைத் தொழிற்­சா­லைக்கு உலகின் Net Zero Carbon என்ற அந்­தஸ்து இவ்­வாண்டு கிடைத்­துள்­ளது. அது மாத்­தி­ர­மின்றி இந்த தொழிற்­சாலை 2008 ஆம் ஆண்டு உலகின் முத­லா­வது Leed பிளாட்­டனம் என்ற சான்­றி­த­ழையும் பெற்­றுள்­ளது.

இவ்­வாறு சிறப்­பம்­சங்கள் பல­வற்றை கொண்­டுள்ள மட்­டக்­க­ளப்பு Brandix ஆடைத் தொழிற்­சா­லையை பார்­வை­யி­டு­வ­தற்­கான வாய்ப்பு அண்­மையில் எமக்குக் கிடைத்­தது. நாம் ஒரு குழு­வாக அங்கு சென்­றி­ருந்தோம்.

குறித்த ஆடைத் தொழிற்­சாலை வளா­கத்­துக்குள் நுழைந்தபோது ஏனைய ஆடைத் தொழிற்­சா­லை­களைப் போல் அல்­லாது வித்­தி­யா­ச­மான ஒரு உணர்வு ஏற்­பட்­டது. தொழிற்­சாலையைச் சுற்றி காற்­றோட்­ட­மான நல்ல இடை­வெளி, அழ­கிய மரங்கள், செடிகள், கொடி­க­ளென பார்ப்­ப­தற்கு பச்சை பசே­லென காட்­சி­ய­ளித்­தது.

அந்த ரம்மி­ய­மான காட்­சி­களை ரசித்­த­வாறே ஆடைத்தொழிற்­சா­லைக்குள் அடி­யெ­டுத்து வைத்தோம். தொழிற்­சா­லைக்­குள்ளே முதலில் நாம் சென்­றது பிர­தான கலந்­து­ரை­யாடல் அறைக்கே. அங்கு எமக்கு சில விளக்­கங்­களும் ஆலோ­ச­னை­களும் வழங்­கப்­பட்­டன. அதன் பின்னர் வழி­காட்டல் குழு­வொன்றின் ஊடாக உற்­பத்தி செயற்­பா­டுகள் இடம்பெறும் பகு­திக்கு அழைத்துச் செல்­லப்­பட்டோம்.

வியப்­பூட்டும் வகை­யிலான் அற்­பு­த­மான கட்­ட­மைப்பு ஏனைய ஆடைத் தொழிற்­சா­லை­களைப் போன்றே இங்கும் ஆடை­களின் ஒவ்­வொரு அங்­கங்­களும் தனித்­த­னி­யான பிரி­வி­னரால் தைக்­கப்­பட்டு இறு­தியில் ஆடை முழு­மை­யாக்­கப்­பட்டு ‍பொதி செய்­யப்­ப­டு­வதை காண­மு­டிந்­தது. ஆனால் எவ்­வித பர­ப­ரப்பும் பதற்­றமும் இன்றி ஊழி­யர்கள் தமது பணி­களை முன்­னெ­டுத்­த­வண்ணம் இருந்­தனர்.

அவர்­க­ளுக்­கான விசேட அறி­வித்­தல்கள் மற்றும் அறி­வு­றுத்­தல்கள் ஒலி­பெ­ருக்கி மூல­மாக வழங்­கப்­பட்­டன. ஒரு ஆடையின் ஒவ்­வொரு பகு­தியும் மற்­றொரு தரப்­பி­னரின் உற்­பத்தி செயற்­பா­டு­க­ளுடன் தொடர்­பு­பட்­டி­ருப்­பதால் ஆரம்பம் முதல் இறு­தி­வ­ரை­யான சகல தரப்­பி­ன­ருக்­கு­மி­டையில் தொடர்­புகள் பேணப்­பட வேண்டும். அதனை இல­கு­ப­டுத்­து­வ­தற்­காக பொது­வான டிஜிட்டல் திரையில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.

அதில் நாளொன்­றுக்கு தேவை­யான மொத்த மூலப்­பொ­ருட்கள் மற்றும் ஒவ்­வொரு பகு­தி­யி­லி­ருந்தும் தயா­ரிக்­கப்­பட வேண்­டிய அள­வுகள் போன்­றன குறிப்­பி­டப்­பட்­டி­ருக்கும். அதே­போன்று ஒவ்­வொரு மணித்­தி­யா­லமும் ஒவ்­வொரு பிரிவிலிருந்து தயா­ரிக்­கப்­பட்­டுள்ள அங்­கங்கள் பற்­றிய தர­வுகள் பதி­வா­கிக்­கொண்டே இருக்கும். அதைக் கருத்­திற்­கொண்டு ஊழி­யர்கள் தமது பணி­யினை முன்­னெ­டுப்­ப­தையும் காண­மு­டிந்­தது.

பின்னர் முழு­மை­யாக்­கப்­பட்ட ஆடைகள் பரி­சோ­திக்­கப்­பட்டு தர­மற்­ற­வைகள் நிரா­க­ரிக்­கப்­பட்டு தர­மா­னவை பொதி செய்­யப்­பட்டு வாடிக்­கை­யாளர் பரி­சோ­த­னைக்­காக கள­ஞ்சி­ய­சா­லையில் வைக்­கப்­ப­டு­கி­றது. இறு­தியில் அவற்றில் சில­வற்றை வாடிக்­கை­யாளர் பரி­சோ­தித்து தரம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டதும் அவை ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கின்­றன.

நிறு­வ­னத்தின் உற்­பத்தி மற்று சிக்­கனம், சூழ­லுக்கு இசை­வான செயற்­பா­டுகள் குறித்து நிறுவனத்தின் விசேட வேலைத்திட்டத்துக்கான சிரேஷ்ட பொதுமுகாமையாளர் ஹேமிந்த ஜயவர்த்தன விளக்­க­ம­ளித்தார்.

உற்­பத்தி நட­வ­டிக்­கை­களின்போது மின்­சா­ரத்தை சிக்­க­ன­மாக பயன்­ப­டுத்­து­வ­தற்­காக குறைந்த வலுவில் இயங்­கக்கூ­டிய தையல் இயந்­தி­ரங்கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. மட்­டக்­க­ளப்பு தொழிற்­சா­லையில் நாம் 1800 தையல் இயந்­தி­ரங்­களை பயன்­ப­டுத்­து­கின்றோம். இவை தின­சரி 16 மணி நேரம் இயங்­கு­கின்­றன. இவை அனைத்­துக்கும் Clutch மோட்­டர்­க­ளுக்கு பதி­லாக குறைந்த வலுவில் இயங்கும் VSD Servo மோட்­டர்கள் பொருத்­தப்­பட்­டுள்­ளன. உற்­பத்தி காலப்­ப­கு­தியில், Clutch மோட்­டர்கள் தொடர்ச்­சி­யாக இயங்­கு­கின்­றன. Servo மோட்­டர்கள் ஊசி இயங்கும் காலப்­ப­கு­தியில் மாத்­தி­ரமே இயங்­கு­கின்­றன. ஊசி இயக்கம் செயற்­பாட்டு நேரத்தின் 17வீதத்தை மாத்­தி­ரமே கொண்­டுள்­ளது. Clutch மோட்­ட­ருடன் ஒப்­பி­டு­கையில் Servo மோட்­ட­ரினால் 68-–73 வீத வலுவை சேமித்துக் கொள்ள முடி­கி­றது.

வாயு சேமிப்பு சாத­னங்கள் (Air Saving Devices) தைக்­கப்­பட்ட ஆடை­களில் சுருக்­கங்­களை அகற்­று­வது என்­பது புதிய செயற்­பாட்டு தேவை­யாக அமைந்­துள்­ளது. இதற்­காக அழுத்­தப்­பட்ட வாயு தொடர்ச்­சி­யாக பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. உள்­ளக அணி­யினால் புத்­தாக்­க­மான வாயு சேமிப்பு சாதனம் ஒன்று வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. இத­னூ­டாக அழுத்­தப்­பட்ட வாயு விர­யத்தை 40 வீதத்­துக்கு மேல் குறைத்துக்கொள்­கின்றோம்.

அதே­போன்று கழிவு நூல்­களை மீள பயன்­ப­டுத்­து­வ­தற்­காக எஞ்­சிய நூல்­களை வேறாக்கி அவற்றை சேமித்து வைக்­கின்றோம். இந்த நூல்­களை புதிய அலங்­கா­ரங்கள் அறி­முகம் செய்யும்போது மீள பயன்­ப­டுத்­து­கின்றோம். கழிவு நீர் வடி­கட்ட நாம் கழி­வுநீர் சுத்­தி­க­ரிப்பு பகு­தி­யொன்றை நிறு­வி­யுள்ளோம். அத­னூ­டாக வடி­கட்­டப்­பட்ட நீரை மீள்­சு­ழற்­சிக்­குட்­ப­டுத்தி கழி­வ­றைகள் மற்றும் விவ­சாய தேவை­க­ளுக்கு பயன்­ப­டுத்­து­கின்றோம். அதே­ போ­ன்று தொழிற்­சா­லையில் காணப்­படும் நீர் தூய்­மை­யாக்கல் கட்­ட­மைப்­பி­னூ­டாக சகல ஊழி­யர்­க­ளுக்கும் சுத்­த­மா­னதும் பாது­காப்­பா­ன­து­மான குடி­நீரை வழங்கி வரு­கின்றோம்.

உணவுக் கழிவு உர­மாக்கல் செயற்­பா­டு­களும் இங்கு மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது . 24 மணி நேர காலப்­ப­கு­தி­யினுள் உணவு கழி­வு­க­ளி­லி­ருந்து கொம்போஸ்ட் உரம் உர­மாக்கல் இயந்­தி­ரத்­தி­னூ­டாக தயா­ரிக்­கப்­ப­டு­கி­றது. இந்த உரம் உள்­ளக உரத் தேவைக்கு பயன்­ப­டுத்­தப்­ப­டு­வதுடன் ஊழி­யர்­க­ளது தேவைக்­கா­கவும் இல­வ­ச­மாக வழங்­கப்­ப­டு­கின்­றது.

உணவுத் தட்­டு­களை கழுவும்போது நீரின் அளவை குறைத்துக் கொள்ள dishwasher பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. இத­னூ­டாக நீரின் வீண் விரயம் தடுக்­கப்­ப­டு­கி­றது. அத்­தோடு தட்­டு­களை கழு­வு­வ­தற்கு கொதி நீரை பெற்றுக்கொள்­வ­தற்­காக solar hot water கட்டமைப்பை நாம் பயன்படுத்துகின்றோம்.

நீரை மேலும் சிக்கனமாக பயன்படுத்த நவீன குழாய் பொருத்திகளை தொழிற்சாலை வளாகத்தில் பொருத்தியுள்ளோம். பாரம்பரிய நீர் பொருத்திகளுடன் ஒப்பிடுகையில் இந்த புதிய பொருத்திகள் ஊடாக 53 வீதமான நீரை சேமிக்க முடிகிறது என எமக்கு விளக்கமளித்தார்.

தொழிற்சாலையின் கூரைப்பகுதியில் சோலா பெனல்கள் பொருத்தப்பட்டு சூரிய சக்தி மூலமாக மின்சாரம் சேமிக்கப்பட்டு தொழிற்சாலை தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது . இவ்வாறு பல்வேறு முன்மாதிரியான செயற்பாடுகளை மட்டக்களப்பு Brandix ஆடைத் தொழிற்சாலையில் எம்மால் காண முடிந்தது. இதுபோன்று சகல நிறுவனங்களும் சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்தி தமது உற்பத்தி செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

– எம்.நேசமணி-

Leave A Reply

Your email address will not be published.

.