இலங்கையில் மதிக்கப்படும் நிறுவனங்களில் உயர்ந்து வரும் ‘பிரைம்’…

இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாக 2019 ஆண்டு மூன்றாவது முறையாகவும் ‘Prime Group’ தெரிவுசெய்யப்பட்டுள்ளது. LMD ( Lanka Monthly Digest) இனால் Nielsen மூலம் சுயாதீனமாக முன்னெடுக்கப்படும் தரப்படுத்தலிலேயே Prime Group இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் மிகவும் மதிக்கப்படும் நிறுவனங்கள் 135 இல் Prime Group 34ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

இரண்டு தசாப்தங்களின் நிலையான வளர்ச்சியின் மூலம், Prime Group பாரிய கூட்டு நிறுவன நம்பகத்தன்மையைப் பெற்றுள்ளது, இது எந்தவொரு எதிர்மறையையும் தகர்த்து, ரியல் எஸ்டேட் சேவைகள் மற்றும் அவர்கள் வழங்கும் தயாரிப்புகள் குறித்து பொது மக்களிடையே வலுவான பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. ‘ரியல் எஸ்டேட்’ பிரிவில் பாரிய நிறுவனங்களுக்கு மத்தியில் மிகவும் மதிக்கப்படும் நிறுவனம் என்ற பட்டமானது Prime Group சம்பாதித்துள்ள மரியாதையின் வெற்றியைக் காட்டுவதாக Prime Group இற்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய, Prime Group இன் தலைவர் பிரமனகே பிரேமலால் தெரிவித்தார்.

” Prime Group இற்கு இணையான அதன் மீதான நம்பிக்கையின் முக்கிய கட்டமைப்பானது, எங்கள் நிறுவனத்தின் பணியாளர்களை அடிப்படையாகக் கொண்டது, அவர்கள் நுகர்வோர் செயற்பாட்டின் பல்வேறு நிலைகளில் நுகர்வோரை எதிர்கொள்கின்றனர். பொதுமக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையானது நிறுவனம் மீதான உறுதியான நம்பகத்தன்மையை உருவாக்க பங்களிக்கின்றது. எனவே, எங்கள் ஊழியர்களை எங்கள் விலைமதிப்பற்ற சொத்துகளில் ஒன்றாக நான் கருதுகிறேன்.

மேலும், Prime Group ‘வர்த்தக நாமம் மற்றும் நற்பெயருக்கு’ இடையிலான சிறந்த சமநிலையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்கிறது. எனவே, தர உத்தரவாதம் மற்றும் புதுமைகளை நோக்கி நாங்கள் பல முயற்சிகளை மேற்கொள்கிறோம். நற்பெயர் முகாமைத்துவத்தில் சேவை மற்றும் பொருளின் தரம் ஆகியன முக்கியத்துவம் வாய்ந்தன. எமது விடயத்தில் ‘பிரைம்’ வர்த்தக நாமம், நாம் தூக்கி நிறுத்த விரும்பும் நற்பெயருடன் நேரடியாக தொடர்புபட்டது. இவ்வாறான சூழ்நிலையில், நேர்மறையான நற்பெயர் மற்றும் ஒரு சேவை கலாச்சாரம் மற்றும் பணி நெறிமுறைகளை பராமரிக்கும் திறன் ஆகியவை ‘பிரைம்’ என்ற வர்த்தக நாமத்துடன் ஒருங்கிணைகின்றன, இது இன்று தொழில்துறையில் ‘மிகவும் மதிப்பிற்குரிய’ ரியல் எஸ்டேட் நிறுவனமாக நாம் அங்கீகரிக்கப்பட எங்களுக்கு உதவியுள்ளது ”என்று தலைவர் வலியுறுத்தினார்.

இலங்கையில் ரியல் எஸ்டேட் தொழில் எந்தவொரு குடும்பத்தினதும் அல்லது வீடு / நில உரிமையாளர்களாக ஆக வேண்டும் என்ற ஒரு நபரின் கனவுகளை எதிரொலிக்கிறது. இதன் மூலம், ஒரு வாடிக்கையாளர் ஒரு ரியல் எஸ்டேட் முகவர் மீது வைக்கும் ‘நம்பிக்கை’ மற்றும் ‘விசுவாசம்’ இணையற்றது. நுகர்வோர் தங்கள் வாழ்நாள் சேமிப்பு மற்றும் முதலீட்டுக்கு சமமான வருமானத்தை வழங்க ‘ரியல் எஸ்டேட்’ முகவரை நம்புகிறார்கள். அதன்படி, நுகர்வோர் தொழில்துறையில் ‘மிகவும் மரியாதைக்குரிய’ ஒரு அமைப்பைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.

ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடையே மிகவும் மதிக்கப்படும் நிறுவனம் என ‘Prime Group’ இற்கு கிடைக்கப்பெற்றுள்ள கௌரவமானது, நாட்டின் மிகவும் நம்பப்படும் ரியல் எஸ்டேட் பங்காளர் என்ற குழுமத்தின் நன்மதிப்பை பறைசாற்றுகிறது. தொழில்துறையில் ஒரு கடுமையான நெறிமுறை நடத்தை மூலம், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, தொழில்துறையில் எந்தவொரு கடுமையான கீழ்நோக்கிய வணிக போக்குகளையும் புறக்கணிக்க Prime Group இனால் முடிந்தது. குழுமத்தின் கவனம் எப்போதும் வாடிக்கையாளர்களுக்கு முதலிடத்தை வழங்குவதே ஆகும். இந்த சேவை நெறிமுறை எந்தவொரு எதிர்மறையான தாக்கத்தையும் இல்லாதொழித்ததுடன், வாடிக்கையாளர்கள் ‘பிரைம்’ கையில் உள்ள தங்கள் முதலீடுகள் தொடர்பில் தொடர்ந்து நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

தூரநோக்கு பார்வையை நிஜமாக மாற்ற ஆர்வமுள்ள தலைவர்களின் ஆதரவுடன், பிரைம் தனது தலைவர்களை அவர்களது தரம், உறுதிப்பாடு மற்றும் ஆக்கத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்கின்றது. Prime Group இன் பாதையை வழிநடத்திச் செல்லக்கூடிய வலுவான தலைமையானது, குழுமத்தின் வெற்றியின் ரகசியமாக உள்ளது. இது கடந்த 24 ஆண்டுகளாக Prime Group ஐ தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களின் பகுத்தறிவு மற்றும் எதிர்பாராத பொருளாதார அழுத்தங்களுக்கு எப்போதும் முகங்கொடுக்கும் ஒரு நாட்டில் மிகவும் ஆற்றல்மிக்க, நெகிழ்ச்சிமிக்க மற்றும் விழிப்புடன் கூடிய சிறந்த தேர்வாக வாடிக்கையாளர்களிடையே இருப்பதை இது குறிக்கிறது.

Prime Group 1995 இல் ஸ்தாபிக்கப்பட்டது மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் இலங்கையின் சந்தையின் முன்னணி நிறுவனமாக வளர்ந்துள்ளது, இது வேகமான மற்றும் எப்போதும் வளர்ந்து வரும் சந்தையின் ஒவ்வொரு பிரிவிற்கும் சேவையை வழங்குவதோடு, ‘பூமியில் ஒரு சிறந்த இடத்தை உருவாக்குதல் என்ற அவர்களின் தூரநோக்கு பார்வைக்கு ஏற்றதாகவும் உள்ளது. தொடர்ச்சியாக 5 ஆண்டுகளாக பணியாற்றுவதற்கான சிறந்த இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், Prime Group மேன்மை மற்றும் சுய முன்னேற்றத்திற்கான தொடர்ச்சியான ஆவல் ஆகியவற்றுக்கான மறுக்க முடியாத அர்ப்பணிப்புடன் உறுதியாக நிற்கின்றது. அதே போல் சாதனை படைப்பதுடன், தனது சொந்த சாதனைகளையே முறியடிக்கின்றது.

 

Leave A Reply

Your email address will not be published.

.